40 ஆண்டு ரகசியம் அம்பலம்; கிம் ஜாங் உன்னின் தந்தை கொரிய நடிகையை கடத்திய காரணம்

வட கொரியா ஒரு சர்வாதிகார நாடு.  அங்கே ஆள்பவர் என்ன நினைக்கிறாரோ அதைத் தான் மக்கள் செய்ய வேண்டும். இங்குள்ள கடுமையான மற்றும் விசித்திரமான விதிகளால்  மக்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். 

Written by - ZEE Bureau | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 16, 2021, 01:10 PM IST
  • பிரபல நடிகையின் கேள்விப்படாத கதை
  • நாட்டின் சர்வாதிகாரி நடிகையை ஏமாற்றி கடத்திச் சென்றார்
  • நேர்காணலின் போது அம்பலமான சம்பவம்
40 ஆண்டு ரகசியம் அம்பலம்; கிம் ஜாங் உன்னின் தந்தை கொரிய நடிகையை கடத்திய காரணம்

புதுடெல்லி: வட கொரியா ஒரு சர்வாதிகார நாடு.  அன்ஃப்கே ஆள்பவர் என்ன நினைக்கிறாரோ அதைத் தான் மக்கள் செய்ய வேண்டும். ஆட்சியாளர்கள் அழச்சொன்னால் அழ வேண்டும்; அவர்கள் சிரிக்க சொன்னால் சிரிக்க வேண்டும். இங்கே 'ராஜா'வுக்கு சிக்கலை ஏற்படுத்தும் அனைத்தையும் தடை செய்யும் போக்கு இங்கே உள்ளது. வட கொரிய இளைஞர்கள் மேற்கத்திய நாகரிகத்தால் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக கிம் ஜாங் உன், ஒரு குறிப்பிட்ட சிகை அலங்காரத்தை தடை செய்ததோடு,  நீல நிற ஜீன்ஸ் அணிவதையும் தடை செய்துள்ளார்.

சர்வாதிகாரி கிம் ஜாங் உன் (Kim Jong Un) வெளிநாட்டுப் படங்களைப் பார்ப்பதற்கும் தடை விதித்துள்ளார். அவரது தந்தை கிம்-ஜோங் இல்  அவர்களுக்கு படங்களை பிடிக்கும் என்பது வேறு விஷயம். அவர் தனது நாட்டில் திரைப்படங்களை தயாரிக்கவும் நாட்டின் பொழுதுபோக்கு துறையை பிரபலபடுத்த வேண்டும் என்ற ஆர்வத்தில், அவர் பிரபல தென் கொரிய நடிகை சோய் யூன்-ஹீயை  (Choi Eun-hee)கடத்தி, அவரை நடிக்க வைத்து சுமார் இரண்டு வருடங்களில் 17 படங்களை தயாரித்தார். நடிகைக்கு குடும்பத்தின் ஞாபகம் வரக் கூடாது என்பதற்காக நடிகையுடன்  நடிகையின் கணவரையும் கடத்தி வந்தார்.

ALSO READ | North Korea: எங்கள் நாட்டில் கொரோனா இல்லவே இல்லை; அடித்து கூறும் கிம் ஜாங் உன்

1970 களின் பிற்பகுதி, தென் கொரிய திரைப்படங்களின் பொற்காலம் என்று அழைக்கப்பட்டன. சோய் யூன் ஹீ (Choi Eun-hee) அந்த காலத்தின் சிறந்த நடிகை. அவரது கணவர் ஷின் ஜியோங்-கியூன் (Shin Jeong-gyun) திரைப்படங்களை தயாரித்து வந்தார். மொத்தத்தில் அது ஒரு பிரபல ஜோடி. கிம்-ஜோங் இல் ஏதேதோ சொல்லி அவரை ஏமாற்றி ஹாங்காங்கிற்கு அழைத்தார். ஆபத்தை அறியாத நடிகை அங்கு சென்றபோது, ​​வட கொரிய ஏஜெண்டால் அவர் கடத்தப்பட்டார். வேகப் படகு மூலம், அவர்கள் தங்கள் அரசர் கிம் ஜாங் இல் இடம் நடிகையை அழைத்துச் சென்றனர். ஹாங்காங்கில் நடந்த வணிக ஒப்பந்தம் ஒரு ஏமாற்று வேலை என்று  நடிகை புரிந்து கொண்டார்.

வட கொரியாவில் (North Korea), அவர்கள் கடத்தப்படாதது போலும், விருப்பதுடம் வந்தது போலவும் பிம்பம் உருவாக்கப்பட்டது.  படங்களுக்கு போஸ் கொடுக்கும் போது, ​​கிம் ஜாங் இல் நடிகையின் கையைப் பிடித்து  கொண்டு, எங்கள் நாட்டுக்கு வந்ததற்கு நன்றி எனக் கூறுவார். லவ்வர்ஸ் அண்ட் தி டெஸ்பாட் என்ற ( (The Lovers and the Despot) )ஆவணப்படத்தின் போது கடத்தப்பட்ட நடிகை இந்த விஷயங்களை குறிப்பிடப்பட்டுள்ளார்.

1986 இல் ஐரோப்பிய திரைப்பட விழாவின் போது, ​​கிம் இருவரையும் வட கொரியாவின் பிரதிநிதிகளாக விழாவிற்கு அனுப்பினார். இந்த ஜோடி கடுமையான பாதுகாப்பில்  அறைகளில் தங்க வைக்கப்பட்டனர். இருந்த போதிலும், இருவரும் எப்படியோ தப்பித்து, அதிர்ஷ்டவசமாக அவர்கள் அமெரிக்காவில் தஞ்சமடைந்தனர். பல வருடங்களுக்குப் பிறகு ஒரு வெளிநாட்டு ஆவணப்படத்திற்காக வழங்கப்பட்ட நேர்காணலில், நடிகை 2 வருடங்கள், 3 மாதங்கள் அதாவது 27 மாதங்களில் இருவரும் மொத்தம் 17 படங்களை தயாரித்ததாக கூறினார். அந்த நேர்காணலின் போது அவர் பல விஷயங்களை அம்பலப்படுத்திய பிறகு தான்  உலகிற்கு இது குறித்து தெரியவந்தது.

இந்த புகழ்பெற்ற மூத்த நடிகை 91 வயதில் ஏப்ரல் 16, 2018 அன்று இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | Kim Jong Un அசத்தல்: வித்தியாசமான முறையில் நாட்டு மக்களுக்கு கூறினார் ‘Happy New Year’

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

 

More Stories

Trending News