ட்விட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை முதலில் வாங்கிய உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், பின்னர் அனைத்து பங்குகளையும் வாங்க முன்வந்தார். ஒரு பங்கு 54.2 அமெரிக்க டாலர் என ட்விட்டர் நிறுவனத்தின் மொத்த பங்குகளையில் 4,400 கோடி அமெரிக்க டாலர்களுக்கு வாங்கியுள்ளார். இந்திய ரூபாயில் இதன் மதிப்பு, ரூ.3.37 லட்சம் கோடி ஆகும்.
ட்விட்டரின் நிர்வாகத்தின் மீது மஸ்க் தொடர்ந்து அதிருப்தி தெரிவித்து வரும் நிலையில், எலோன் மஸ்க் ட்விட்டருக்கு புதிய தலைமை நிர்வாக அதிகாரியை நியமிக்க திட்டமிட்டுள்ளதாக, செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
திட்டமிட்டுள்ள மாற்றங்களையும், தனது யோசனைகளையும் செயல்படுத்த, தனக்கு எண்ணத்திற்கு ஏற்ப செயல்படும் வகையிலான நிர்வாக குழுவை எலான் மஸ்க் கட்டாயம் கொண்டு வருவார் என்று ஊகிக்கப்பட்ட நிலையில், நிறுவனத்தின் தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வாலின் பதவி நீடிக்குமா என்பது குறித்து கேள்வி எழும்பியுள்ளது.
மேலும் படிக்க | எலான் மஸ்க் ட்விட்டருக்கு மிக பொருத்தமான நபர்: ஜாக் டார்ஸி
முன்னதாக, சமூக ஊடக நிறுவனத்தின் அதிகாரம் கை மாறிய 12 மாதங்களுக்குள் பராக் அகர்வால் நீக்கப்பட்டால் $42 மில்லியன் காம்பன்ஷேஷன் கொடுக்க வேண்டியிருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
எனினும், கோடீஸ்வரர் அதன் உயர் அதிகாரிகள் உட்பட நிறுவனத்தில் ஏதேனும் மாற்றங்களைச் செய்வதும் அத்தனை சுலபம் அல்ல. தற்போதைய நிலவரப்படி, ட்விட்டர் வாரியம், நிறுவனத்தை எலான் மஸ்கிற்கு விற்க ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால் ஒழுங்குமுறை ஆய்வு பணி நிறைவடையவில்லை, மேலும் எலான் மஸ்க் நிறுவனத்திற்கு பணம் செலுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது
நவம்பரில் ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்ட அகர்வால், நிறுவனத்தின் அதிகாரம் முழுமையாக கைமாறும் வரை அவரது பதவியில் நீடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எலான் மஸ்க் நிறுவனத்தை கையகப்படுத்தும் முடிந்ததும் மற்ற உயர் அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது
இதற்கிடையில், வெள்ளிக்கிழமை ஊழியர்கள் மத்தியில் நடந்த முக்கிய கூட்டத்தில் எலான் மஸ்க் நிறுவனத்தை கையகப்படுத்திய பின் ஏற்படும் மாற்றங்கள், பணி உறுதி ஆகிய விஷயங்கள் குறித்து டிவிட்டர் ஊழியர்கள் பராக் அகர்வாலிடம் தங்கள் அதிருப்தியை வெளிக்காட்டினர். இதனால் எலான் மஸ்க் நிறுவனத்தை கைப்பற்றும் முன்பே பராக் அகர்வால் வேறு நிறுவனத்திற்கு மாற அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது எனவும் தகவல்கள் கூறுகின்றன.
மேலும் படிக்க | எலான் மஸ்கின் ஆட்குறைப்பு திட்டம்; அச்சத்தில் ட்விட்டர் பணியாளர்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR