சீனா - ரஷ்யா இடையில் வரம்பற்ற ராணுவ கூட்டணி?... மூன்றாம் உலக போர் அச்சத்தில் உலகம்!

உக்ரைன் போர் சீனாவையும் ரஷ்யாவையும் மிக நெருக்கமாக கொண்டு வந்துள்ளது. கடந்த ஓராண்டில் இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர தொடர்பு வலுப்பெற்றுள்ளது. ஆனால் அவர்களுக்கு இடையே அதிகரித்து வரும் தொடர்பு உலகையே பயமுறுத்தியுள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 18, 2023, 03:12 PM IST
  • சீனாவும் ரஷ்யாவும் மூன்றாம் உலகப்போர் பற்றிய அச்சத்தை தூண்டிவிடுள்ளன
  • இரு நாடுகளும் இப்போது வரம்பற்ற இராணுவக் கூட்டணியை நோக்கி நகர்கின்றன
  • சமீபத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்தார் அதிபர் புடின்.
சீனா - ரஷ்யா இடையில் வரம்பற்ற ராணுவ கூட்டணி?... மூன்றாம் உலக போர் அச்சத்தில் உலகம்! title=

பெய்ஜிங்: உலகமே தற்போது ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போரில்னால் உண்டாகும் பாதிப்புகளில் சிக்கித் தவித்து வரும் நிலையில், மூன்றாம் உலகப் போர் அபாயம் உருவாகி உள்ளது. சீனா மற்றும் ரஷ்யாவின் வரம்பற்ற இராணுவக் கூட்டணி என்னும் ஒப்பந்தம் குறித்த செய்திகள் மூன்றாம் உலகப் போரின் அச்சங்களைத் தீவிரப்படுத்தியுள்ளன. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் லி ஷங்ஃபு ஆகியோர் இந்த கூட்டணியை சுட்டிக்காட்டியுள்ளனர். இரு நாடுகளும் இணைந்து செயல்படுவதாக உறுதியளித்துள்ளனர். இரு இராணுவ சக்திகளையும் பலப்படுத்தக்கூடிய அத்தகைய திட்டங்களை முன்னெடுப்பதற்கும் உறுதி பூண்டுள்ளது.

சீன பாதுகாப்பு அமைச்சருடன் சந்திப்பு

சீன அதிபர்  ஜி ஜின்பிங்கை  ரஷ்ய அதிபர் புடின் சமீபத்தில் சந்தித்தார். இரு தலைவர்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இது தவிர ஷாங்ஃபுவையும் சந்தித்துப் பேசினார் புடின். இங்கு இரு தலைவர்களும் ராணுவ உதவியில் வரம்புகள் இல்லாத கூட்டாண்மை பற்றி பேசியுள்ளனர். ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வரம்புகள் இல்லாத இராணுவக் கூட்டணி பற்றி புடின் கூறுகையில், நாங்கள் எங்கள் ராணுவத் துறைகள் மூலம் இணைந்து செயல்படுகிறோம், தேவையான தகவல்களை தொடர்ந்து பரிமாறி வருகிறோம். இதனுடன், இராணுவ-தொழில்நுட்ப ஒத்துழைப்புத் துறையிலும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, மேலும் நாங்கள் இணைந்து இராணுவப் பயிற்சிகளையும் செய்கிறோம் என்றார்.

அமெரிக்காவின் அச்சம்

நியூஸ் வீக் வெளியிட்ட அறிக்கைக்குப் பிறகு, சில அமெரிக்க இராணுவ வல்லுநர்கள் சீனா ரஷ்யாவிற்கு ஆபத்தான உபகரணங்களை வழங்க தயாராகி வருவதாக அச்சம் வெளியிட்டுள்ளனர். புலனாய்வு முகமை CIA இன் இயக்குனர் வில்லியம் பர்ன்ஸ் இது குறித்து கூறுகையில், சீன அதிபர் ஜின்பிங் ரஷ்யாவிற்கு ஆயுதங்களை கொடுத்து உதவுவது குறித்து சிந்திப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என குறிப்பிட்டார். பர்ன்ஸின் இந்த குற்றச்சாட்டை அடுத்து சீன வெளியுறவு அமைச்சகம் மிகவும் கோபமடைந்துள்ளது. செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் சிஐஏ அறிக்கையை ஜி ஜின்பிங் மற்றும் சீனா மீது குற்றம் சாட்டுவதற்கும் தவறான தகவல்களை பரப்புவதற்கும் ஒரு வழி என விவரித்தார்.

மேலும் படிக்க | அதிபர் புடினுக்கு எதிராக கருத்து தெரிவித்த காரா முர்சாவிற்கு 25 ஆண்டுகள் சிறை!

வடகொரியாவும் பங்கேற்குமா?

இது குறித்துகருத்து தெரிவித்த சீனா, 'சீனாவுக்கு உத்தரவிட அமெரிக்காவுக்கு அதிகாரம் இல்லை, சீனா-ரஷ்யா உறவுகளுக்கு அமெரிக்காவின் ஆட்சேபனையை நாங்கள் ஒருபோதும் ஏற்கவில்லை. உக்ரைன் போரில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை ரஷ்யாவுக்கு வழங்க மாட்டோம் என்று சீனா தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால்,  சீனா மற்றும் வடகொரியா ஆகிய இரு நாடுகளின் படைகளை உக்ரைனில் நிலைநிறுத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக டெய்லி ஸ்டார் செய்தி வெளியிட்டுள்ளது. ரஷ்யாவின் தொகுப்பாளர் விளாடிமிர் சோலோவியோவ்  'சீனா மற்றும் வட கொரியாவில் இருந்து துருப்புக்களைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.'  என்றார். இதற்கு உக்ரைன் உள்துறை அமைச்சர் அன்டன் கெர்ஷ்செங்கோ பதிலடி கொடுத்துள்ளார்.

மேலும் படிக்க | சீனா - ரஷ்யா வேண்டாம்... எங்க டீமில் சேருங்க... இந்தியாவிடம் அமெரிக்கா MP கோரிக்கை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News