பிரதமராக அல்ல... இந்துவாக வந்திருக்கிறேன்... ராமர் கதாகாலட்சேபத்தில் ரிஷி சுனக்!

பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக், ராமர் கதையை கேட்டு ரசித்ததோடு,  இந்து மதம் தனது வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் வழிநடத்துகிறது என்றார்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 16, 2023, 06:19 AM IST
  • இந்து மதம் தனது வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் வழிநடத்துகிறது.
  • ஆன்மீக நம்பிக்கை எனக்கு மிகவும் தனிப்பட்ட விஷயமாகும்.
  • சுனக் மேடையில் நடந்த ஒரு ஆரத்தியில் பங்கேற்றார்.
பிரதமராக அல்ல... இந்துவாக வந்திருக்கிறேன்... ராமர் கதாகாலட்சேபத்தில் ரிஷி சுனக்! title=

ரிஷி சுனக்: பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக் செவ்வாயன்று இந்து மதம் தனது வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் வழிநடத்துகிறது என்றும் நாட்டின் அரசாங்கத் தலைவராக சிறந்த வேலையைச் செய்யத் தன்னை ஊக்குவிக்கிறது என்றும் கூறினார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உள்ள ஜீசஸ் கல்லூரியில் ஆன்மீக குரு மொராரி பாபுவின் 'ராம் கதா' என்னும் பகவான் ராமர் வாழ்க்கையினை விவரிக்கும் கதாகாலட்ஷேபம் நடக்கிறது, இதில் பிரதமர் சுனக் பங்கேற்றார். இந்தியாவின் சுதந்திர தினத்தன்று இந்த நிகழ்ச்சியின் தற்செயல் நிகழ்வை பிரிட்டன் பிரதமர் அடிக்கோடிட்டுக் காட்டினார். ‘ராம் கதா’ என்னும் ராமர் கதாகாலட்சேபத்திற்கு வந்திருந்த மக்கள் முன்னிலையில், “பாபு, நான் இங்கு பிரதமராக அல்ல, இந்துவாக வந்துள்ளேன்” என்று சுனக் தனது உரையைத் தொடங்கினார்.

ரிஷி சுனக் மேலும் கூறுகையில், “ஆன்மீக நம்பிக்கை எனக்கு மிகவும் தனிப்பட்ட விஷயமாகும். இது என் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் வழிநடத்துகிறது. பிரதமராக இருப்பதே பெரிய கவுரவம் தான், ஆனால் இந்த பதவியை வகித்து கடமைகளை நிறைவேற்றுவது அவ்வளவு எளிதல்ல. கடினமான முடிவுகளை எடுக்க வேண்டும், கடினமான தேர்வுகளை ஒருங்கிணைக்க வேண்டும், மேலும் எனது நம்பிக்கை எனக்கு நாட்டிற்காக உழைக்க தைரியம், வலிமை மற்றும் போராடும் குணத்தை இந்து மதம் எனக்கு அளிக்கிறது என்றார் ரிஷி சுனக்.

சுனக் (43) 2020 ஆம் ஆண்டில் முதல் முறையாக 11 டவுனிங் தெருவில் விளக்கை ஏற்றிய சிறப்பு தருணத்தைப் பகிர்ந்து கொண்டார். இது அவரது அதிகாரப்பூர்வ இல்லமான முதல் இந்திய வம்சாவளி பிரிட்டிஷ் அதிபராக (நிதிப் பொறுப்பு) ஏற்ற தருணம் என்றார். மொராரி பாபுவின் ராம்காதாவில் மேடையின் பின்புறத்தில் உள்ள ஹனுமான் தங்கப் படத்தைப் பற்றி சுனக் கூறினார், "தங்க விநாயகர்" 10 டவுனிங் தெருவில் உள்ள எனது மேஜையில் எப்படி மகிழ்ச்சியாக அமர்ந்திருக்கிறார் என்பதை இது எனக்கு நினைவூட்டுகிறது. "ஒரு வேலையை தொடங்குவதற்கு முன்பு அது குறித்த விளைவுகளை ஆராய்ந்து, ஆலோசனை செய்து  பின் அது குறித்த முடிவினை எடுக்க  வேண்டும் என்பது எனக்கு ஒரு நிலையான நினைவூட்டல்," என்று அவர் கூறினார்.

மேலும் படிக்க |  2671இல் இருந்து 2023க்கு வந்த டைம் டிராவலர்? - அடுக்கடுக்காக வெளியிடும் அதிர்ச்சி தரும் தகவல்கள்!

சுனக், தனது மனைவி அக்ஷதா மூர்த்தி மற்றும் குழந்தைகளான கிருஷ்ணா மற்றும் அனுஷ்காவுடன் அமெரிக்காவில் குடும்ப சுற்றுலாவை முடித்துக் கொண்டு திரும்பி வந்தார். சுனக், தனது குழந்தைப் பருவத்தை சவுத்தாம்ப்டனில்  கழித்தது பற்றி அடிக்கடி நினைத்துப் பார்க்கும்போது, தான் பிரிட்டிஷ் மற்றும் இந்துவாக இருப்பதில் பெருமிதம் கொள்வதாகக் கூறினார்.

"குழந்தை பருவத்தில் வளர்ந்தபோது, ​​சௌதாம்ப்டனில் உள்ள எங்கள் உள்ளூர் கோயிலுக்கு சென்று, அங்கு நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டது பற்றி எனக்கு மிகவும் இனிமையான நினைவுகள் உள்ளன. எனது பெற்றோரும் குடும்பத்தினரும் ஹோமங்கள், பூஜைகள், ஆரத்திகளை ஏற்பாடு செய்வார்கள்; பிறகு, நான் என் சகோதரன் மற்றும் சகோதரி மற்றும் உறவினர்களுடன் மதிய உணவு மற்றும் பிரசாதம் வழங்க உதவுவேன்," என்று சுனக் கூறினார்.

ரிஷி சுனக் இறுதியாக, ராமர் எப்போதும் தனக்கு ஒரு உத்வேகம் தரும் நபராக இருப்பார் என்று சுனக் கூறினார். "ராமாயணத்தை நினைவு கூர்ந்து இன்று இங்கிருந்து புறப்படுகிறேன்" என்று கூறினார். இறுதியில், சுனக் மேடையில் நடந்த ஒரு ஆரத்தியில் பங்கேற்றார். ஜோதிர்லிங்க ராம் கதா யாத்திரையின் புனிதப் பிரசாதமாக சோம்நாத் கோவிலில் இருந்து பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கத்தை மொராரி பாபு அவருக்கு வழங்கினார்.

மேலும் படிக்க | 2023ம் ஆண்டின் ‘அந்த’ 6 நாட்கள்... ஆச்சர்யத்திலும் நடுக்கத்திலும் உலகம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News