மாரடைப்பால் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு 3-லட்சம் நிதியுதவி!
எர்ணாகுளத்தில் மாரடைப்பால் உயிரிழந்த கிருஷ்ணசாமியின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்குவதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்!
13:48 06-05-2018
தேர்வு மையத்திலிருந்து வெளியே வந்த கிருஷ்ணசாமியின் மகன் கஸ்தூரி மகாலிங்கம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்..!
இன்று மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான NEET நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்று முடிவடைந்தது!
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) நடத்தும் இத்தேர்வினில் களந்துக்கொள்ள நாடு முழுவதும் சுமார் 13,26,725 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் மட்டும் 1,7,288 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். நாடு முழுவதும் 2,255 மையங்களில் இத்தேர்வு இன்று நடைபெறுகிறது. அதில் தமிழகத்தில் மட்டும் 170 மையங்கள் இடம்பெற்றுள்ளது. இதை தொடர்ந்து, நீட் தேர்வு எழுத பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து மாணவர்களை உடலளவிலும் மன அளவிலும் சோர்வடைய வைத்துள்ளனர்.
இந்த தேர்வு இன்று காலை 10 மணிக்கு துவங்கியது. தற்போது, தேர்வு முடிவடைந்த நிலையில் தேர்வு எவ்வாறு இருந்தது என மாணவர்கள் தன்களின் பெற்றோர்களிடம் பகிர்ந்து வருகின்றனர்!
இந்நிலையில், நீட் தேர்வு எழுத மகனை கேரளா அழைத்துச் சென்ற தந்தை கிருஷ்ணசாமி எர்ணாகுளத்தில் மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் அனைவரையும் அதிர்சிக்குள்ளக்கியது. இதையடுத்து, மாரடைப்பால் உயிரிழந்த கிருஷ்ணசாமியின் உடலை தமிழகத்திற்கு கொண்டுவர தமிழக அரசு அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.
தற்போது, தமிழக அரசு தமிழகத்திலிருந்து நீட் தேர்வு எழுத மகனை கேரளா அழைத்துச் சென்ற தந்தை கிருஷ்ணசாமி எர்ணாகுளத்தில் மாரடைப்பால் மரணமடிந்தவரின் குடும்பத்திற்கு இரங்கலைத் தெரிவித்துள்ளது. மேலும், மாரடைப்பால் உயிரிழந்த கிருஷ்ணசாமியின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்குவதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.