ஜெயலலிதா என்னை படிக்க விடாமல் தடுத்தார் - கனிமொழி NVN சோமு பகீர் குற்றச்சாட்டு

Kanimozhi, Jayalalithaa | திமுக குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதற்காக மருத்துவக் கல்வி இட ஒதுக்கீட்டை  எனக்கு மறுத்தவர் ஜெயலலிதா என எம்.பி. கனிமொழி என்விஎன் சோமு குற்றம்சாட்டியுள்ளார். 

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 2, 2024, 12:27 PM IST
  • மருத்துவ இட ஒதுக்கீட்டை மறுத்துவர்
  • நீதிமன்றம் மூலம் இட ஒதுக்கீடு பெற்றேன்
  • ஜெயலலிதா மீது திமுக எம்பிகுற்றச்சாட்டு
ஜெயலலிதா என்னை படிக்க விடாமல் தடுத்தார் -  கனிமொழி NVN சோமு பகீர் குற்றச்சாட்டு title=

Kanimozhi, Jayalalithaa News | திமுக எம்பி கனிமொழி, தமிழ்நாட்டின் முன்னாள் முதலைமச்சர் ஜெயலலிதா (Jayalalithaa) மீது குற்றச்சாட்டு ஒன்றை வைத்துள்ளார். அதில், தான் திமுக குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் தனக்கான மருத்துவ இட ஒதுக்கிட்டை ஜெயலலிதா மறுத்தார், அதனால் நீதிமன்றம் சென்று போராடி என்னுடைய இட ஒதுக்கீட்டை பெற்று படித்தேன் என திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். மேலும், மருத்துவ துறையை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையின் 25 ஆம் ஆண்டு விழாவில் எம்பி கனிமொழி என்வி சோமு கலந்து கொண்டார். அப்போது பேசிய கனிமொழி, தாம் முதன்முதலாக செங்கல்பட்டு மருத்துவ கல்லூரியில் தான் மருத்துவ படிப்பை பயின்றதாக தெரிவித்தார். கலைஞர் காலத்தில் இந்தி திணிப்பிற்கு எதிராக போராடியவர்களுக்கு மருத்துவ படிப்பிற்கு 6 சீட் இட ஒதுக்கீடாக வழங்கப்பட்டதாகவும், ஆட்சி மாறியதும் அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா திமுக குடும்பத்தை சார்ந்தவர் என்பதால் இட ஒதுக்கீட்டை வழங்க வில்லை என்றும் கூறினார். பின்னர் நீதிமன்றம் சென்று வழக்காடி அந்த இட ஒதுக்கீட்டை தாம் அதை பெற்று தற்போது மருத்துவராக இருப்பதாகவும் கூறினார். 

மேலும் படிக்க | காசிமேட்டில் நிறுத்தி வைக்கப்பட்டத விசைப்படகு கடலில் மூழ்கி சேதம்

"நான் திமுக குடும்பத்தைச் சேர்ந்தவர். அதனால் இட ஒதுக்கீடு மூலம் மருத்துவத்துக்கு விண்ணப்பித்தேன். ஆனால், என்னுடைய மருத்துவ இட ஒதுக்கீட்டை ஜெயலலிதா மறுத்தார். கலைஞர் ஆட்சிக் காலத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றவர்களின் குடும்பங்களுக்கு மருத்துவத்தில் இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டிருந்தது. அந்த அடிப்படையில் நான் மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்கும்போது என்னுடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. பின்னர் நீதிமன்றம் சென்று வழக்கில் வெற்றி பெற்று செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரியில் படித்தேன். இப்போது மருத்துவராக இருக்கிறேன்." என கனிமொழி என்வி சோமு தெரிவித்தார். 

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி என்வி சோமு, மருத்துவர்கள் நுகர்வோர் (வாடிக்கையாளர் ) சட்டத்திற் குட்பட்வர்களாக இருக்கிறார்கள். ஆனால் மருத்துவர்களுக்கு என்று ஒரு தனி அமைப்பு இருக்க வேண்டும். அதில் இருக்க கூடிய மருத்துவர்கள் நாங்கள் கூறக்கூடிய கருத்தை பார்ப்பார்கள். இது தொடர்பாக பாராளுமன்றத்தில் நான் கொண்டு வந்த தனிநபர் மசோதாவை ஏற்க மத்திய அரசு முயற்சிக்கவில்லை. எங்களை consumer என சொல்லும் மத்திய அரசு எங்களிடம் ஜிஎஸ்டி வாங்குகிறது. அப்படியானால் மருத்துவர்கள் ஜிஎஸ்டி வரியோடு மருத்துவம் பார்க்க முடியுமா?. மருத்துவ துறையை மத்திய அரசு சான்விட்ஜ் போன்று வைத்துள்ளது" என குற்றம்சாட்டினார்.

மேலும் படிக்க | மது பிரியர்களே! இன்று முதல் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News