கோவை இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கில் தேசிய புலனாய்வு துறை 4 பேரை கைது செய்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கோவை மாநகர் இந்து முன்னணி அமைப்பின் மாவட்ட செய்தித் தொடர்பாளராக இருந்தவர் சசிகுமார். இவர் கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் 22-ஆம் நாள் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். 


இந்த வழக்கு தொடர்பாக முபாரக், அபுதாகிர், சதாம் உசேன், சுபேர் என்னும் 4 பேரை CBCID காவல்துறையினர் கைது செய்திருந்தனர். CBCID வசமிருந்த சசிகுமார் கொலை வழக்கு கடந்த ஜனவரி மாதம் தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றப்பட்டது. 



இந்நிலையில் தேசிய புலனாய்வு துறை, சசிகுமார் கொலை தொடர்பான வழக்கில், முதல்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர். முன்னதாக கைது செய்யப்பட்ட பாரக், அபுதாகிர், சதாம் உசேன், சுபேர் ஆகியோரின் வீடுகளில் தேசிய புலனாய்வு துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 


கோவை சாய்பாபா காலனி, உக்கடம் ஆகிய பகுதிகளில் இந்த சோதனை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!