பள்ளி உணவில் நச்சுத்தன்மை; 40 மாணவர்கள் கவலைகிடம்!
உத்திரப் பிரதேச மாநிலம் ஈட்டா-வின் கஸ்தூரி பாய் பள்ளியில் பயிலும் மாணவர்கள், உபாதை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்!
ஈட்டா: உத்திரப் பிரதேச மாநிலம் ஈட்டா-வின் கஸ்தூரி பாய் பள்ளியில் பயிலும் மாணவர்கள், உபாதை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்!
கஸ்தூரி பாய் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவில் நச்சுத்தன்மை கலந்ததினால், அந்த உணவை உண்ட மாணவர்கள் 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். திடீரென மயங்கி விழுந்த இந்த மாணவர்களை அருகில் இருந்த ஆரம்ப சுகாதார மையத்திக்கு கொண்ட சென்றனர் பின்னர் அனைவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தினமும் மதிய உணவு வழங்கப்படுவது வழக்கம். இந்நிலையில் இன்று மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டு உள்ளது. இதனை உண்ட மாணவர்கள் திடீரென மயக்க நிலைக்கு செல்ல, அருகில் இருந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அவர்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். பின்னர் அங்கிருந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
மருத்துவமனையில் மாணவர்களை பரிசோதித்த மருத்துவர், மாணவர்கள் உண்ட உணவில் நச்சுத்தன்மை இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் காரணமாக 40 மாணவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி நிர்வாக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.