நியாய விலை கடையில் குறைவான ரேஷன் வாங்க மறுத்த 75 வயது மூதாட்டி அடித்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உத்திரப் பிரதேச மாநிலம் பைரஜாபாத்தில், நியாய விலை கடையில் நிர்ணயிக்கப்பட்ட அளவிற்கு குறைவான அளவில் பொருட்கள் வழங்கப்பட்டதை கண்டித்த 75 வயது மூதாட்டி ஒருவரை அந்த நியாய விலை கடை ஊழியர்கள் அடித்து கொன்றுள்ளனர்.


நேற்று மாலை நடைப்பெற்ற இச்சம்பவம் தொடர்பாக நியாய விலை கடை ஊழியர்கள் நஸீம், சமீம் மற்றும் சானு என்னும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 


இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மூதாட்டியின் பெயர் ஆஸி, நேற்றைய தினம் நியாய விலை கடைக்கு சென்று பொருட்களை வாங்குகையில் நிர்ணயிக்கப்பட்ட அளவிற்கு குறைவான அளவில் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. இதனை வாங்க மறுத்து அவர் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார்.


இதனால் ஆத்திரமடைந்த ஊழியர்கள் அவரை தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் மூதாட்டி பரிதாபமாக உயிர் இழந்துள்ளார். தற்போது மூதாட்டியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப் பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி ரிஜ்வான் தெரிவித்துள்ளார்!