அமெரிக்காவில் உள்ள ஒரு விண்வெளி நிறுவனம் முதல்முறையாக விண்வெளியில் ஓர் ஆடம்பர சொகுசு ஹோட்டல் கட்ட உள்ளதாக அறிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சான்ஜோஸில் ஸ்பேஸ் மாநாடு நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட அமெரிக்காவின் ஓரியோன் ஸ்பேன் என்ற நிறுவனம் விண்வெளியில் முதல்முறையாக ஆடம்பர ஹோட்டல் ஒன்றைக் கட்ட இருப்பதாக அறிவித்துள்ளது. 


இதன் பணிகளை விரைவில் தொடங்க உள்ளதாகவும் வரும் 2021-ம் ஆண்டு முழு கட்டமைப்புப் பணிகளும் நிறைவுபெற்று அதன் பின் பயணிகள் தங்க அனுமதிக்கப்படுவார்கள் என்றது. இதில் ஆறு பேர் 12 நாட்கள் தங்க 61 கோடி ரூபாய் வசூலிக்கப்பட உள்ளதாகவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. 


இது குறித்து அந்நிறுவனத்தின் சி.இ.ஓ ஃபரான்க் பன்கெர் கூறும்போது:- விண்வெளியிலிருந்து பூமியைப் பார்க்கப் பலருக்கும் கனவு உண்டு இதை நிஜமாக்கவே இந்த முயற்சியாகும். 


இதற்காக, பூமியில் இருந்து விண்வெளி செல்லும் மனிதர்களுக்கு தக்க பயிற்சி கொடுக்கப்பட்ட பின் மனிதர்கள் இந்த ஹோட்டலுக்கு பாது காப்பாக அழைத்து செல்லப்படுவார்கள். 


இதற்காக மிகவும் பாதுகாப்பான முறையில் இயங்கும் ராக்கெட் வடிவமைக்கப்படும் என்று அந்நிறுவனத்தின் முதன்மை செயலதிகாரி பிராங்க் பங்கர் தெரிவித்துள்ளார். 


இந்த அரோரா ஸ்பேஸ் ஸ்டேஷன் பெரிய ஜெட் ராக்கெட் போல இருக்கும். இதன் நீளம் 43.5 அடியும், அகலம் 14.1 அடியும் இருக்கும். இதன் கொள்ளளவு 5,650 கன அடி இருக்கும். 


இது மக்கள் தங்குவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு அமைக்கப்பட உள்ளதாகவும், அவர்கள் விண்வெளியில் தங்கும்போது ஒரு நாளுக்கு 16 சூரிய உதயமும் 16 சூரிய மறைவும் காணமுடியும்' எனக் கூறினார்.