நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்காவுக்கு 10 நாள் பயணமாகச் சென்றுள்ளார். கடந்த ஏப்ரல் 23-ம் தேதி, ரஜினி அமெரிக்கா புறப்பட்டு சென்றார். அங்கு உடல்நல பரிசோதனை செய்ததுடன் அமெரிக்க, கனடா ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளிடமும் ஆலோசனை நடத்தினார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் அமெரிக்க பயணத்தை முடித்த ரஜினி, நேற்றிரவு சென்னை வந்தார். விமான நிலையத்தில் ரசிகர்கள் அவருக்கு உற்சாக வரவேற்புபை கொடுத்துள்ளனர். இதனிடையே, வரும் 9-ம் தேதி, ரஜினி நடித்த காலா பட இசை வெளியீட்டு விழா, சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் நடக்கிறது. 


இந்தநிகழ்ச்சியில் பங்கேற்கும் ரஜினி, ரசிகர்கள் மத்தியில் அரசியல் அறிவிப்புகளை வெளியிடுவார் என அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருகின்றனர்!