பிரபல நடிகை ஜெயந்தி உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இவர் தமிழ், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 500-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் எம்.ஜி.ஆருடன் இணைந்து 'படகோட்டி', 'முகராசி' ஆகிய படங்களிலும், சிவாஜி கணேசனுடன் இணைந்து 'கர்ணன்', 'இருவர் உள்ளம்' உள்ளிட்ட சில படங்களிலும், ஜெமினி கணேசன், ஜெய்சங்கர் ஆகிய ஹீரோக்களுடனும் பல படங்களில் நடித்துள்ளார். 


கர்நாடகா மாநிலம், பெல்லாரி மாவட்டத்தில் 1945-ம் ஆண்டு பிறந்த நடிகை ஜெயந்தி கமலாகுமாரி ஜெயந்தி என்ற பெயருடன் சினிமாவில் நுழைந்தார். தனது முதல் கன்னட படமான ஜூனு கூடு என்ற படத்தை இயக்கிய பெக்கெட்டி சிவராமை திருமணம் செய்து கொண்டார்.


'மிஸ் மாலினி' என்ற படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கையால் தேசிய விருதும், கர்நாடகா மாநில அரசின் தேசிய விருதும் பெற்றுள்ளார். 


இந்நிலையில், இதுகுறித்து ஜெயந்தியின் மகன் கிருஷ்ண குமார் கூறியது:- கடந்த 35 வருடங்களாக ஆஸ்துமா பிரச்னையால் அவர் அவதிப்பட்டு வருகிறார். சுவாசப் பிரச்னைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில்லை. அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கவலைப்படுமளவுக்கு நிலைமை தற்போது இல்லை. நன்குத் தேறி வருகிறார் என்று கூறியுள்ளார்.


முன்னதாக அவர் காலமானார் என்று செய்திகள் சமூக வளைத்ததில் பரவி வந்த நிலையில் தற்போது அவர் நன்குத் தேறி வருகிறார் என்று அவரது மகன் உறுதிப்படுத்த உள்ளார்.