'ஜெயம்' படத்தின் மூலமாக தமிழ் திரையுலகுக்கு கதாநாயகியாக அறிமுகமான நடிகை சதா. பிறகு ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் ஜோடியாக 'அந்நியன்', அஜித் ஜோடியாக 'திருப்பதி' உள்ளிட்ட பல படங்களில் தொடர்ந்து நடித்திருக்கிறார். இதைப்போலவே, இவர் தெலுங்கிலும் நிறையப் படங்கள் நடித்திருக்கிறார்.   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நாயகியாக வலம் வந்த சதாவுக்கு இப்போது பட வாய்ப்புகள் குறைந்துள்ளது. தற்போது அவர், 'டார்ச் லைட் ' என்கிற படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். விஜய்யை வைத்து 'தமிழன் 'படத்தை இயக்கிய மஜீத் இப்படத்தை இயக்குகிறார்.   


வறுமையால் பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்ட பெண்கள் பற்றிப் பேசும் இந்தப் படத்தில், நெடுஞ்சாலைகளில் டார்ச் லைட்டுடன் நின்று கொண்டு லாரி ஓட்டுநர்களிடம் பாலியல் தொழில் செய்யும் பெண்ணாக சதா நடித்திருக்கிறார். இந்தக் கதையில் நடிக்க பலரும் தயங்கிய போது, நடிகை சதா மட்டும் தைரியமாக நடிக்கச் சம்மதித்துள்ளார்.  


படத்தின் பிரதான பாத்திரத்தை சதா ஏற்க ரித்விகா, புதுமுகம் உதயா, இயக்குநர் வெங்கடேஷ், சுஜாதா ரங்கநாதன் ஆகியோர் முக்கிய கதாப்பாத் திரங்களில் நடித்துள்ளனர். இது ஒரு பீரியட் பிலிம். 90-களில் நடக்கும் கதையாக இந்தப் படம் உருவாகி உள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கோவில்பட்டி, குற்றாலம், சென்னை போன்ற பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.


'டார்ச் லைட் ' படத்தின் இயக்குநர் மஜீத்தின்  திறமையில் நம்பிக்கை வைத்து, அவரது இயக்கத்தில், அடுத்த படத்தைத்  தயாரிக்க முன்வந்துள்ளார் நடிகை சதா. அவர், முதல் முதலில் படத் தயாரிப்பில் இறங்கும் அந்தப் படத்தின் வேலைகள் விரைவில் தொடங்க உள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.