ரூ. 5 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரையிலான விவசாயக் கடன்களை முதல்வர் எடியூரப்பா தள்ளுபடி செய்தார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கர்நாட்டக முதல்வராக பதவியேற்றதும் முதல் கையெழுத்தாக ரூ. 5 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரையிலான விவசாயக்கடன்களை தள்ளுபடி செய்யும் ஆணையில் கையெழுத்திட்டார்.


நடந்து முடிந்த கர்நாட்டக சட்டமன்ற தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் கர்நாட்டக மாநில முதல்வராக எடியூரப்பா இன்று பதவியேற்றுக் கொண்டார். 


பெரும்பான்மை இல்லாமல் எடியூரப்பா முதல் மந்திரியாக பதவியேற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து, முன்னாள் முதல் மந்திரி சித்தராமையா மற்றும் JDS உறுப்பினர்கள் கர்நாடக மாநில சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளார். 


இது ஒருபுறம் இருக்க, முதல்வர் எடியூரப்பா தலைமைச்செயலகம் வந்து தனது பணிகளை சப்தம் இன்றி துவங்கினார். இந்நிலையில் இன்று தனது முதல் கையொழுத்தாக ரூ.5 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரையிலான  விவசாயக்கடன்களை தள்ளுபடி செய்யும் ஆணையில் கையொழுத்திட்டார்.