சிரியாவை போன்றே ஆப்கானிஸ்தான் போரால் சீரழிந்த நாடுகளில் ஒன்றாக உள்ளது. கடந்த 16 வருடங்களாக தலீபான் தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் அப்பாவி பொது மக்கள், குழந்தைகள் உள்பட ஆயிரக் கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்நாட்டு அரசு போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக தலீபான் அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என முன்வந்தது. எனினும், தொடர்ந்து தாக்குதல் நடந்து வருகிறது.


அதேபோன்று, சிரியாவில் 2012 முதல் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இருப்பினும், அங்கு கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பொது மக்கள் வசிக்கும் இடங்களின் மீது சிரியா மிகக் கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது. 


இதில், பொது மக்கள், குழந்தைகள் உள்பட ஆயிரக் கணக்கானவர்கள் உயிரிழந்துள்ளனர். கொல்லப்பட்ட குழந்தைகளின் புகைப்படங்களைப் பார்த்து உலகமே கலங்கியது. 


கடந்த 3 வாரங்களில் சுமார் 1500 பேர் கூட்டா பகுதியில் கொல்லப்பட்டுள்ளனர். ஐ.நா-வின் பாதுகாப்பு கவுன்சில் ஒரு மாத காலம் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்திய நிலையில், அதை மதிக்காமல் சிரிய அரசு தொடர் தாக்குதல் நடத்தி வருருக்கிறது.


இதையடுத்து சிரிய ராணுவம் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்களால், கூட்டா பகுதியில் உள்ள மக்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களில் பொதுமக்கள் அதிக அளவு வெளியேற துவங்கிய நிலையில், நேற்று தொடர் வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 78 பேர் கொல்லப்பட்டனர். 


இதற்கு சிரியா, ரஷ்யா கூட்டுப்படையின் இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்ததையடுத்து போர் நிறுத்தப்படவில்லை.


இந்த நிலையில், சிரியாவை போன்றே ஆப்கானிஸ்தானிலும் தாக்குதல் தொடங்கியுள்ளது. இந்த தாக்குதலில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பினரும் அந்நாட்டில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக ஆப்கானிஸ்தான் அரசும் பதில் தாக்குதலை நடத்தி வருகிறது.  


இந்நிலையில், ஐ.எஸ். தீவிரவாதிகள் பதுங்கியுள்ள பகுதிகளை இலக்காக கொண்டு ஆளில்லா விமானம் நடத்திய வான்வழி தாக்குதலில் அந்த அமைப்பின் தீவிரவாதிகள் 6 பேர் பலியாகியுள்ளனர்.