ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு அதிரடி திட்டங்களை டெலிகாம் நிறுவனங்கள் அறிவித்து வரும் நிலையில் LandLine வாடிக்கையாளர்களை மகிழ்விக்க Airtel திட்டம் தீட்டியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரபல டெலிகாம் நிறுவனமான Airtel தனது லேண்ட்லைன் வாடிக்கையாளர்களுக்கு அதிரடி சலுகை திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது. இத்திட்டத்தின் படி Airtel வாடிக்கையாளர்கள் அதிவேக 300mbps பிராட்பேண்ட சேவையினை வெரும் ரூ,2199-க்கு பெற முடியும்.


இத்திட்டத்தின் மூலம், மாதம் ஒன்றிர்க்கு ரூ.2199 செலுத்துவதன் மூலம், 300mbps வேகத்தில் 1200GB டேட்டாவினை வாடிக்கையாளர்கள் பெறுவர். மேலும் வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளையும் பெறுவர்.


இந்த திட்டத்தில் இணையும் வாடிக்கையாளர்களுக்கு Airtel நிருவனத்தின் இதர சேவைகளான Wynk Music, Airtel TV சந்தாக்கள் இலவசமாக வழங்கபடும். அத்துடன் Amazon Prime சந்தாவும் இலவசமாக கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தினை ஆன்லைன் மூலம் வரும் அக்டோபர் 31-க்குள் பெறுபவர்களுக்கு கூடுதலாக 1TB டேட்டா போனாஸாக வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



தற்போது இந்த சேவையானது நாட்டின் சில இடங்களில் மட்டுமே அறிமுகம் செய்யபட்டுள்ளது. குறிப்பாக FTTH இணைப்பு கொண்டுள்ள நகரங்களில் மட்டுமே பெறமுடியும். வாடிக்கையாளர்கள் தங்களுக்கு இந்த சேவை கிடைக்குமா என்பதினை Airtel-ன் அதிகாரபூர்வ இணையதளத்தில் பார்த்து தெரிந்துக்கொள்ளலாம் என Airtel நிர்வாக இயக்குனர் ஜார்ஜ் மேத்தன் அறிவித்துள்ளார்!