அல்ஜீரியா தலைநகரில் அருகில் அமைந்துள்ள புஃப்பரிக் விமான நிலையத்தில் இருந்து சுமார் 250-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை ஏற்றிக்கொண்டு சென்ற இல்யூசைன் II-76 என்ற ராணுவ விமானம் புஃப்பரிக் விமான நிலையத்தில் அருகிலேயே விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இதுவரை 257 பலியாகிவிட்டதாக அந்த நாட்டின் செய்தி சேனல் தெரிவித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சில செய்தி சேனல்கள் விமானத்தில் குறைந்தபட்சம் இருநூறு நபர்கள் இருந்தன என்று தெரிவிக்கின்றன. தற்போது அங்கே குறைந்தது 14 ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு வந்துள்ள. காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என விமான நிலையத்திற்கு அருகே உள்ள அனைத்து வீதிகளும் மூடப்பட்டு உள்ளன. 


இச்சம்பவம் குறித்து ஒரு தொலைக்காட்சி காட்டும் போது, நொறுங்கி விழுந்த விமானம் தீ பிடித்து எரிவதால், அடர்ந்த கருபுகை வெளியேறி வருகிறது. மேலும் அதன் அருகே அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருவதும் காட்டப்பட்டு உள்ளது. மேலும் ஒரு விமானத்தின் ஒரு பகுதி எரிந்த நிலையில், அங்கு இருக்கும் ஒலிவ மரத்தின் மேலே காணப்பட்டது.


இந்த விபத்து ஏற்பட்டுள்ள விமான நிலையம் அல்ஜீரியாவின் விமானப்படை உள்ளது. இச்சம்பவம் குறித்து அந்நாட்டு அரசு தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறது.