ஜெயம் ரவி நடிப்பில் உருவான ”டிக் டிக் டிக்” படம் இந்தியாவின் முதல் வின்வெளி படமாகும். பிரமாண்ட பொருள் செலவில் எடுத்த இந்த படத்தின் ரிலீஸ் தேதி சில தவிர்க்க முடியாத காரணங்களால் தள்ளி போன நிலையில் தற்போது புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி - நிவேதா பேத்துராஜ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ”டிக் டிக் டிக்”. நேமிசந்த் ஜபக் புரொடக்ஷன்ஸ் தயாரித்து இந்தியாவின் முதல் வின்வெளி படமாக உருவாகியிருக்கிறது. இந்த படத்தில், ஜெயப்பிரகாஷ், ரமேஷ் திலக், வின்சென்ட் அசோகன், அர்ஜூனன், ஜெயம் ரவி மகன் ஆரவ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 


படத்திற்க்கு டி இமான் இசையமைத்துள்ளார். இது அவரது 100-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. பிரமாண்ட தயாரிப்பால் எடுத்த இந்த படத்தை ஜனவரியில் ரிலீசாக உள்ளது ஆனால் சில காரணங்களல் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போன நிலையில் தற்ப்போது இப்படத்தின் புதிய ரிலீஸ் தேதியை ”டிக் டிக் டிக்” படக்குழு அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. 


இந்த படம் வருகின்ற ஜூன் 22-ம் தேதி ரிலீசாக இருப்பதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.