ஜெயலலிதா ரத்த மாதிரி எங்களிடம் இல்லை - அப்போலோ அறிக்கை
மறைந்த முன்னால் முதலவர் ஜெயலலிதாவின் ரத்த மாதிரி எங்களிடம் இல்லை என அப்போலோ மருத்துவமனை தெரிவித்துள்ளது!
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உண்மையான மகள் நான் தான் என்று கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த அம்ருதா என்ற பெண் (வயது 38) டெல்லி உச்ச நீதிமன்றத்தில் முன்னதாக மனு செய்தார்.
ஜெயலலிதா தன் சொந்த தாய் என கூறி பரபரப்பை ஏற்படுத்திய அம்ருதா, இது குறித்து ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ஆகியோருக்கு கடிதம் எழுதினார்.
இதை தொடர்ந்து, ஜெயலலிதாவின் மகள் என தன்னை அறிவிக்க வேண்டும் என்றும், அவர் என் தாய்தான் என்பதை நிரூபிக்க டி.என்.ஏ பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
அம்ருதாவின் கோரிக்கை குறித்து உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தியது. நீதிபதி மதன் லோகூர் தலைமையிலான அமர்வு இந்த மனுவை ஆய்வு செய்து வந்தது. இதை தொப்டர்ந்து பலகட்ட விசாரனடைகளை கடந்த இந்த வழக்கு மறைந்த முன்னாள் முதலவர் ஜெயலலிதா-வின் ரத்த மாதிரி இருக்கிறதா என்று கேட்டிருந்தது.
இந்த வழக்கானது, இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது ஜெயலலிதாவின் ரத்த மாதிரி தங்களது மருத்துவமனையில் இல்லை என அப்போலோ மருத்துவமனை அறிக்கை தாக்கல் செய்தது.