அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ளது கோலபாரா மாவட்டத்தில் 22 வயது இளம்பெண் ஒருவரை ஐந்தாறு பேர் கொண்ட குடிகாரக் கும்பல் ஒன்று கடுமையாக தாக்கியுள்ளது. பெண் என்றும் பாராமல் பெண்ணின் முதுகு, கை, கால் என அந்த குடிகார கும்பல் கண்ட இடத்தில் மிதிக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அப்பெண் இவர்களிடம் இருந்து தன்னை காத்துக்கொள்ள உதவி தேடி யாருக்கோ தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சிக்கிறார். அப்போது அந்த குடிகார கும்பல் வலியிலும், அவமானத்திலும் அலறித் துடிக்கும் அப்பெண்ணை விடாமல் தாக்கும் மீண்டும் மீண்டும் அப்பெண்னை முடியை பிடித்து இழுத்து தாக்குகின்றனர். அவளை மட்டும் இன்றி அப்பெண்ணுடன் வந்த ஆண் நண்பரையும் பயங்கரமாக தாக்குகின்றனர். 


இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில்....! 


பெண்ணை கடுமையாக தாக்கியது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் 12 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். தாக்கப்பட்ட பெண்ணுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. அவர் ஆண் நண்பர் ஒருவருடன் மருத்துவ மையம் ஒன்றிற்கு சென்றிருக்கிறார். அந்த நேரத்தில் அவரை வழிமறித்த குடிகாரக் கும்பல் ஒன்று வேறு ஒரு ஆண் நண்பருடன் வெளியே செல்வது தொடர்பாக கேள்வி எழுப்பியிருக்கின்றனர். 


இதனையடுத்து ஏற்பட்ட வாக்குவாதத்தில் அந்தக் கும்பல் அந்த பெண்ணை கடுமையாக தாக்கியிருக்கிறது. பெண்ணுடன் சென்ற நபர் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர். அந்தப் பெண்ணோ மற்றொரு சமூகத்தைச் சேர்ந்தவர். இதனையத்து இனவாத பதட்டங்களை தவிர்க்கும் பொருட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என போலீசார் தெரிவித்துள்ளனர்..!