ஒரே ரீசார்ஜில் 3 மொபைல்களுக்கு ஒரு நாளைக்கு 1ஜிபி டேட்டா கொடுத்து அசத்தும் BSNL..! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஐ.பி.எல் போட்டியை தொடர்ந்து ஏர்டெல் மற்றும் ஜியோ என இரு நிறுவனங்களும் தங்களுக்குள் போட்டியாக பல்வேறு புதிய திட்டங்களையும் சலுகைகளையும் அறிவித்து வருகிறது. 


டெலிகாம் நிறுவனகள் தங்களின் ஒவ்வொரு ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்ள நிறைய அதிரடி சலுகைகளை அறிவித்து வருகின்றனர். அதிலும், ரிலையன்ஸ் ஜியோ-வை மிஞ்சும் வகையில் ஏர்டெல் நிறுவனம் போட்டி போட்டு சலுகைகளை அறிவித்து வருகிறது. 


இதை தொடர்ந்து, ஐடியா, BSNL, ஓடாபோன் என அனைத்து லிகாம் நிறுவனங்களும் போட்டிபோட்டு சலுகைகளை தெரிவித்து வருகிறது. இதில், அரசாங்கத்திற்கு சொந்தமான டெலிகாம் நிறுவனமான BSNL-லும் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்ள மொபைல் மற்றும் பிராட்பேண்ட் இணைப்புகளையும் வழங்கி வருகிறது. 


சிறப்பான மொபைல் மற்றும் பிராட்பேண்ட் சேவைகளை வழங்குவதில் BSNL-ஐ அடித்துக்கொள்ள முடியாது என்பதற்கு பல திட்டங்களை எடுத்துக்காட்டாக கூறலாம். அந்த பட்டியலில் மேலுமொரு பேமிலி திட்டம் இணைக்கப்பட்டுள்ளது. 


BSNL-ன் பேமிலி திட்டம் பற்றிய விவரம்...! 


இந்த திட்டம் இந்தியா முழுவதும் செல்லுபடியாகும். இந்த பேமிலி பேக் திட்டத்தின் கீழ் கிடைக்கும் டேட்டாவின் வரம்பானது 30 ஜி.பி ஆகும். இந்த பிராட்பேண்ட் இணைப்பின் மூலம் மேலும் மூன்று BSNL ப்ரீபெய்ட் இணைப்புகளை ஒன்றிணைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, நாள் ஒன்றிற்கு 1-ஜிபி அளவிலான டேட்டாவை மொத்தம் மூன்று மொபைல்களில் பயன்படுத்த முடியும்.


இத்திட்டத்தில் மொத்தம் 30 ஜிபி அளவிலான டேட்டாவை, 10 Mbps வேகத்தின் கீழ் வழங்கும் மற்றும் இதன் பதிவிறக்க வேகத்தை பொறுத்தவரை 2 Mbps ஆகும். இந்தத் திட்டத்தை ரீசார்ஜ் செய்த பின்னர், இலவச மொபைல் சேவைகளை அணுக விரும்பும் மூன்று BSNL ப்ரீபெய்ட் எண்களைத் தேர்வு செய்ய வேண்டும்.


தேர்ந்தெடுக்கப்படும் ஒவ்வொரு எண்ணும் ஒரு நாளைக்கு ரோமிங் அழைப்புகள் உட்பட வரம்பற்ற வாய்ஸ் மற்றும் 1 ஜிபி தரவு போன்ற நன்மைகளை பெறும். 1ஜிபி டேட்டாவை பொறுத்தவரை, 40 Kbps என்கிற வேகம் கிடைக்கும். இந்த BSNL பேமிலி திட்டத்தின் விலை வெறும் ரூ.1199 மட்டும் தான். 


முன்னதாக, இதே திட்டத்தின்கீழ் ஒரு மொபைல் எண்ணுக்கு 1 ஜிபி அளவிலான டேட்டா வழங்கப்பட்டதும், தற்போது அது மொத்தமாகவே 1ஜிபி டேட்டா தான் என்று குறைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது!