7th Pay Commission: ஊழியர்களுக்கு அடிக்கப்போக்குது ஜாக்பாட்.. 4% ஹைக், 22000 சம்பள உயர்வு
ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோரின் அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்படும். இதற்கான முடிவு கூறிய விரைவில் வெளியாகும். இதன் காரணமாக ஊழியர்களின் சம்பளம் ரூ.22000 வரை உயர்த்தப்படுவது உறுதி என்று கருதப்படுகிறது.
7வது சம்பள கமிஷன், ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு குறித்து சமீபத்திய புதுப்பிப்பு: ஒரு கோடி ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு விரைவில் ஒரு பெரிய பரிசு வழங்கப்பட உள்ளது. அதன்படி இவர்களின் அகவிலைப்படியில் நான்கு சதவீதம் அதிகரிப்பு உறுதியாக வழங்கப்படும் என்று கருதப்படுகிறது. தற்போது இதற்கான முன்மொழிவு தயாரிக்கப்பட்டு வருகிறது. எதிர்வரும் செப்டெம்பர் இறுதியில் நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த யோசனை முன்வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதற்கு ஒப்புதல் கிடைத்தவுடன், நவராத்திரி பண்டிகைக்கு முன்னதாக ஊழியர்களின் அகவிலைப்படியை உயர்த்தி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
அகவிலைப்படி விரைவில் 4 சதவீதம் உயர்த்தப்படும்:
இந்நிலையில் தற்போதுன் ஒரு கோடிக்கும் அதிகமுள்ள ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு (DA Hike) பரிசாக மோடி அரசு வழங்கவுள்ளது. இதன் மூலம் அவர்களின் அகவிலைப்படி 46 சதவீதமாக உயரும். இதனிடையே தற்போது, மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் 42 சதவீதம் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏஐசிபிஐ புள்ளிவிவரங்களை வெளியிடப்பட்டுள்ளன:
ஏஐசிபிஐ புள்ளிவிவரங்களின் படி, தற்போது வரை, ஆகஸ்ட் 2023 வரையிலான All India Consumer Price Index (AICPI) தரவுகள் வெளியிடப்பட்டுள்ளது. ஜூலை 2023 வரை வெளியிடப்பட்ட தரவுகளின்படி, மத்திய ஊழியர்களின் அகவிலைப்படியில் 4 சதவீதம் அதிகரிப்பு உறுதியாக இருக்கும் என்று கருதப்படுகிறது. அந்த வகையில் 50 சதவீத அகவிலைப்படி எட்டினால், மத்திய ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் மீண்டும் ஒருமுறை திருத்தப்படும். இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. எதிர்பார்த்தபடி இந்த உயர்வு 4 சதவிகிதமாக இருந்தால் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் ஆண்டுக்கு 8,000 ரூபாயில் இருந்து 27000 ரூபாயாக அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.
அகவிலைப்படி உயர்வு: எந்த மாதம் முதல் அமலுக்கு வரும்?
அரசு ஊழியர்களுக்கு (Government Employees) விரைவில் அதாவது இந்த மாதம் (செப்டம்பர் மாதத்தில்) அகவிலைப்படி உயர்வை (DA Hike) வழங்க முடியும். அதன்படி 2023 ஜனவரி முதல் ஜூலை வரையிலான அகவிலைப்படி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இம்முறையும் அகவிலைப்படி 4 சதவீதம் அதிகரிக்கப்பட உள்ளது. தற்போது ஊழியர்களின் அகவிலைப்படி 42 சதவீதமாக உள்ளது. அரசு ஊழியர்களுக்கு உயர்வு அறிவிப்புக்கு பின், இது 46 சதவீதத்தை எட்டும் எனது என்பது குறிப்பிடத்தக்கது.
அகவிலைப்படி வருடத்திற்கு இரண்டு முறை அதிகரிக்கப்படுகிறது
மத்திய ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு ஆண்டுக்கு இருமுறை செய்யப்படுகிறது. மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் ஒவ்வொரு மாதமும் தொழிலாளர் பணியகத்தால் வெளியிடப்படும் தொழில்துறை தொழிலாளர்களுக்கான சமீபத்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CPI-IW) அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. இது தொழிலாளர் அமைச்சகத்தின் ஒரு பிரிவாகும். தற்போது, அதன் புதிய தரவுகளின்படி, ஜூலை 2023க்கான CPI-IW 3.3 புள்ளிகள் அதிகரித்து 139.7ஐ எட்டியுள்ளன. கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 2.42 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேசமயம், ஓராண்டுக்கு முன், இதே மாதத்தில், இந்த தரவு 0.90 சதவீதம் அதிகரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ