ரூ.2,000 நோட்டுக்களை திரும்பப்பெறுவது தொடர்பான அறிவிப்பை இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) கடந்த மே 19-ம் தேதியன்று வெளியிட்டது.  தற்போது புழக்கத்தில் இருக்கும் ரூ.2,000 நோட்டுகளை செப்டம்பர் 30 வரை வங்கிகளில் டெபாசிட் செய்யலாம் அல்லது மாற்றிக்கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த ரூ.2000 தொகையை மாற்றுவதற்கு மத்திய வங்கி குறிப்பிட்ட வரம்பை நிர்ணயித்துள்ளது. அதாவது ஒரு நேரத்தில் அதிகபட்சமாக ரூ.20,000 வரை டெபாசிட் செய்துகொள்ளவும் அல்லது மாற்றிக்கொள்ளவும் வங்கி அனுமதிக்கிறது.  இதுகுறித்து பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரி கூறுகையில், ஒருவர் ரூ.2,000 நோட்டுகளை மாற்ற விரும்பினால், ஆதார் போன்ற அரசு வழங்கிய அடையாள அட்டையை வங்கிக் கிளையில் சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை.  ரூ.2,000 கரன்சி நோட்டுகளை மாற்றுவதற்கு கூடுதல் தனிப்பட்ட தகவல்களைக் கோரிய பழைய படிவங்கள் ஆன்லைனில் புழக்கத்தில் இருந்ததால் இந்த விளக்கம் அளிக்கப்பட்டது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | 7th Pay Commission: ஜூலை மாதம் 2 பெரிய குட் நியூஸ்...டிஏ உடன் இதுவும் அதிகரிக்கும்


ரூ.20,000 ரூபாய் வரம்பிற்குள், கோரிக்கை சீட்டு இல்லாமல் ரூ. 2,000 கரன்சி நோட்டுகளை மாற்ற மக்கள் அனுமதிக்கப்படுவதாக பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) தெரிவித்துள்ளது.  ரிசர்வ் வங்கி முன்னர் வெளியிட்டிருந்த அறிக்கையின்படி, தனிநபர்கள் ரூ.2,000 நோட்டுகளை தங்கள் வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்யவோ அல்லது வங்கியின் எந்தக் கிளையிலும் வெவ்வேறு மதிப்புகளின் ரூபாய் நோட்டுகளாக மாற்றவோ அனுமதிக்கப்படுகிறார்கள்.  தனிநபர்கள் ஒரே வங்கிக் கிளையிலோ அல்லது பிற வங்கிகளிலோ பல டெபாசிட்கள் அல்லது பரிமாற்றங்களைச் செய்யலாம் என்று மத்திய வங்கி கூறியுள்ளது. ரூ.2,000 நோட்டுகளை எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளும் வசதி தனிநபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.  ரிசர்வ் வங்கியின் கூற்றுப்படி, சுமார் 89% ரூ.2,000 கரன்சி நோட்டுகள் மார்ச் 2017-க்கு முன் அறிமுகப்படுத்தப்பட்டது.  


புழக்கத்தில் உள்ள இந்த ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு ரூ.6.73 லட்சம் கோடியிலிருந்து குறைந்து, புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளில் 37.3 சதவீதம், மார்ச் 31, 2018 நிலவரப்படி, ரூ.3.62 லட்சம் கோடியாகக் குறைந்துள்ளது.  மார்ச் 31, 2023 நிலவரப்படி, இந்த மதிப்பு தற்போது 10.8 சதவீதமாக மட்டுமே உள்ளது.  பல சில்லறை நகை வியாபாரிகள் அதிகளவில் ரூ.2000 தொகையை மாற்றும்போது வாடிக்கையாளர்களிடம் ஆதார் மற்றும் பான் கார்டின் நகலைக் கேட்கின்றனர்.  வரி ஆய்வுக்கு எதிராக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவே நகை வியாபாரிகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.  வங்கிக் கணக்கு இல்லாதவர்களும் இனி ஒரே நேரத்தில் ரூ.2000 நோட்டுகளை வங்கிக்குச் சென்று மாற்றிக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் தெளிவாக தெரிவித்து இருக்கிறது.  மே 23 முதல் ரூ.2000 நோட்டுகளை திரும்பப் பெற ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.  மும்பையின் நகை வியாபாரிகள் பலர் ரூ.20,000, ரூ.50,000 மற்றும் அதற்கு மேற்பட்ட தொகைக்கு ஆதாரமாக பான் மற்றும் ஆதார் அட்டைகளை கேட்பதாக கூறப்படுகிறது.


மேலும் படிக்க | DA Hike: 3 லட்சம் ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி... அகவிலைப்படியை உயர்த்திய மாநில அரசு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ