புதுடெல்லி: 2021 இல் பணக்காரர்களாக இருக்க விரும்பினால், பங்குச் சந்தையில் அருமையான 6 வாய்ப்புகள் காத்துக் கொண்டிருக்கின்றன.  2021 ஆம் ஆண்டில் 6 நிறுவனங்கள் தங்கள் ஐபிஓவைத் (Initial Public Offering (IPO))தொடங்க திட்டமிட்டுள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2021 இல் பணக்காரர்களாக இருக்க விரும்பினால், பங்குச் சந்தையில் அருமையான 6 வாய்ப்புகள் காத்துக் கொண்டிருக்கின்றன.  2021 ஆம் ஆண்டில் 6 நிறுவனங்கள் தங்கள் ஐபிஓவைத் (Initial Public Offering (IPO))தொடங்க திட்டமிட்டுள்ளன.இந்த ஐபிஓக்களிடமிருந்து சம்பாதிக்க மிகப்பெரிய வாய்ப்பு இருக்கும். 


எல்.ஐ.சி (LIC), ரெயில்டெல் (Railtel), கல்யாண் ஜுவல்லர்ஸ் (Kalyan Jewellers), என்.சி.டி.இ.எக்ஸ் (NCDEX), பஜாஜ் எனர்ஜி (Bajaj Energy) மற்றும் மான்டே கார்லோ (Montecarlo) ஆகியோரின் ஐபிஓக்கள் இதில் அடங்கும். Mrs Bectors Food Specialties 500 கோடி ரூபாய் மதிப்பிலான ஐபிஓ சமீபத்தில் முதலீட்டிற்காக திறந்தது என்பதும் நினைவுகூரத்தக்கது. 


Also Read | விஸ்ட்ரான் நிறுவனத்திற்கு புதிய ஆர்டர்கள் கொடுக்கப்பட்டாது: ஆப்பிள் நிறுவனம்


எல்.ஐ.சியில் இருந்து பம்பர் வருவாய்
இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷனில் (LIC (Life insurance corporation of India) பங்குகளை விற்பனை செய்வதற்கு முன்பு, அதன் காப்பீட்டு மதிப்பீட்டிற்காக அரசாங்கம் நடைமுறை நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்களை கோரியது. எல்.ஐ.சியில் உள்ள பங்குகளை (Shares) விற்று பங்குச் சந்தையில் பட்டியலிட அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதற்காக, டெலோயிட் (Deloitte) மற்றும் எஸ்பிஐ கேபிடல்  (SBI Capital) ஆகியவை ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ளன.
ரெயில்டெல் (Railtel)ஐபிஓவையும் கொண்டு வரும். 


PSU ரெயில் டெயில் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட். (Railtel) ஐபிஓ மூலம் 700 கோடி ரூபாய் முதலீட்டை (Investment) திரட்ட செபி ஒப்புதல் கொடுத்துள்ளது.  இதன் கீழ், அரசாங்கம் 8.66 சதவீத பங்குகளை விற்பனை செய்யும். ஐபிஓவுக்கு தேவையான ஆவணங்களை நிறுவனம் அக்டோபரில் சமர்ப்பித்தது. இதற்கு நவம்பர் 6, 2020 அன்று செபியிடமிருந்து ஒப்புதல் கிடைத்தது.  நாட்டின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு உள்கட்டமைப்பு வசதி நிறுவனங்களில் ஒன்று இது. Railtel. இது ரயில் பாதையில் ஒரு பரந்த ஆப்டிகல் ஃபைபர் நெட்வொர்க்கைக் (optical fiber network) கொண்டுள்ளது.


கல்யாண் ஜுவல்லர்ஸ் (Kalyan Jewellers)
கல்யாண் ஜுவல்லர்ஸ் (Kalyan Jewellers, India) கல்யாண் ஜுவல்லர்ஸ் இந்தியா லிமிடெட்  நிறுவனம் மூலம் சுமார் 1,750 கோடி ரூபாய் திரட்ட சந்தை கட்டுப்பாட்டாளர் செபியிடமிருந்து பச்சைக் கொடி கிடைத்துவிட்டது. கல்யாண் ஜுவல்லர்ஸ் தாக்கல் செய்த ரெட் ஹெர்ரிங் ப்ராஸ்பெக்டஸ் Red Herring Prospectus (RHP)படி, ஐபிஓவின் கீழ் ரூ .1,000 கோடி வரை புதிய ஈக்விட்டி பங்குகளை வெளியிடுவதற்கும், தற்போதுள்ள பங்குகளின் விற்பனை சலுகை (OFS) மூலம் ரூ .750 கோடி வரை திரட்டவும் திட்டமிட்டுள்ளது.


Also Read | SBI மெகா மின் ஏலத்தின் மூலம் உங்கள் கனவு வீட்டை மலிவாக வாங்கலாம்!


கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவகர் டி.எஸ். கல்யாண்ரமன் 250 கோடி ரூபாய் வரை பங்குகளை விற்பனை செய்வார், கல்யாண் ஜுவல்லர்ஸ் தங்கம் மற்றும் பிற ஆபரணங்களை விற்பனை செய்வதில் பிரபல நிறுவனம் ஆகும்.  


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR