புதுடெல்லி: 32 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட ரியல்மே ஸ்மார்ட் டிவி தற்போது ரூ .11,499 க்கு விற்பனைக்கு வருகிறது. அதாவது 1,500 ரூபாய் தள்ளுபடி கிடைக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

32 அங்குல ரியல்மே ஸ்மார்ட் டிவி மாடல் தற்போது மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. முன்பு 12,999 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது.  
இந்தச் சலுகையைத் தவிர,  எஸ்பிஐ-யின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு 10 சதவீத தள்ளுபடியை வழங்குகிறது Flipkart.  


சலுகைகள் ஒருபோதும் முடிவதில்லை. மேலே சொன்னவற்றைத் தவிர, Paytm Wallet மூலமாக வாங்கினால், 125 உடனடி கேஷ்பேக் சலுகையும் கிடைக்கும். மாதந்திர தவணையில் வாங்க வேண்டுமா? கவலை வேண்டாம். மாதந்தோறும் 1,278 என்ற வட்டியில்லாத EMI  தெரிவையும் நீங்கள் தேர்வு செய்துக் கொள்ளலாம்.  



32 அங்குல ரியல்மே ஸ்மார்ட் டிவியில் என்னென்ன செயலிகள் செயல்படும் தெரியுமா? Netflix, Amazon Prime Video, Disney+ Hotstar, and Youtube. இது போதுமா? இன்னும் கொஞ்சம் வேண்டுமா? இதோ,32 அங்குல ரியல்மே ஸ்மார்ட் டிவியின் அம்சங்கள்:  


Realmeவின் 32 அங்குல ஸ்மார்ட் டிவி எச்டி-ரெடி (720p) பேனலுடன் 178 டிகிரி viewing angle கொண்டது. தொலைக்காட்சி ஸ்மார்ட் டி.வி.களுக்கான மீடியாடெக்கின் சக்திவாய்ந்த குவாட் கோர் 64-பிட் செயலி (quad-core 64-bit processor) மூலம் இயக்கப்படுகிறது. இதில், ARM Cortex A53 1.1GHz CPU உடன் Mali-470 MP3 GPU பொருத்தப்பட்டுள்ளது.  


Chromecast built-in and HDR10 video decoding செய்யப்பட்டு அனுப்பப்படுகிறது. இந்த ஸ்மார்ட் டிவியில் HLG பொருத்தப்பட்டதால் காட்சி உயர் தரம் கொண்டதாக இருக்கும்.   ரியல்மே ஸ்மார்ட் டிவியின் 2133MHz RAM, பிற தொலைகாட்சிப் பெட்டிகளில் பயன்படுத்தப்படும் சாதாரண 1600 மெகா ஹெர்ட்ஸ் ரேமை விட வேகமாக உள்ளது. 


இது 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி ஸ்டோரேஜ் வசதி கொண்டது. ஸ்மார்ட் டிவிகளும் பிரபலமான ஸ்ட்ரீமிங் மீடியா தளங்களை ஆதரிக்கின்றன. Realme TVயில், Netflix, YouTube, Prime Video, LiveChannel என பல செயலிகள் (apps) ஏற்கனவே பொருத்தப்பட்டிருக்கின்றன.  


இவற்றைத் தவிர, Android பயன்பாடுகளுக்கு, Google Play Store வழியாக appகளை பதிவிறக்குவதற்கான தெரிவும் உண்டு. 24W down-firing ஸ்டீரியோ ஸ்பீக்கர்களும் கொண்டது. இந்த ஒலிபெருக்கிகள், டிவி பேனலின் அடிப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ளன. இதுமட்டுமா? கூடுதலாக, தொலைக்காட்சியின் ஒலி திறன்களுக்காக Dolby Audio MS12B solution பொருத்தப்பட்டுள்ளது.



கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR