இந்தியாவில் 42 புற்றுநோய் மருந்துகளின் விலைகள் பெருமளவு குறைந்துள்ளது. இதில் தேசிய மருந்துகள் விலை ஆணையமான NPPA க்கு முக்கிய பங்கு உண்டு. NPPA 526 பிராண்டுகள் தயாரிக்கும் மருந்துகள் விலையை 90 சதவீதம் வரை குறைத்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புற்றுநோய்க்கான (Cancer) மருந்துகளின் விலையைக் குறைக்க 2019 பிப்ரவரியில் தொடங்கப்பட்ட முயற்சிகள் எதிர்பார்த்ததை விட சிறந்த முடிவுகளைப் பெற்று தந்துள்ளதாக தேசிய மருந்து விலை ஆணையம் (NPPA) தெரிவித்துள்ளது. 


பொது நலனில் அக்கறை கொண்ட NPPA, தனது அதிகாரத்தை பயன்படுத்தி 42 புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளை குறைந்த விலையில் மருந்துகளை வழங்கும் ஒரு முன்னோடி திட்டத்தை தொடக்கியது. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மலிவான விலையில் சுகாதார சேவையை வழங்குவதே இதன் நோக்கம்.


NPPA எடுத்த நடவடிக்கையை தொடர்ந்து, 526 பிராண்டின் 42 புற்றுநோய்க்கான மருந்துகளின் விலை 90% குறைந்துள்ளது என்பது தெளிவாகியுள்ளது.


உதாரணமாக, பிர்லோடிப் பிராண்டின் கீழ் தயாரிக்கப்பட்ட 150 மி.கி எர்லோடினிப் (Erlotinib ) மருந்தின் விலை ரூ .9,999 லிருந்து ரூ .891.79 ஆக குறைந்தது, இது 91.08% குறைந்துள்ளது. இதேபோல், Pemestar 500 பிராண்டின் கீழ் விற்கப்பட்ட 500 மி.கி  Pemetrexed ஊசி விலை ரூ .25,400 லிருந்து ரூ.2509 ஆக குறைந்துள்ளது, இது 90% குறைவு. 


புற்றுநோய் நோயாளிகள் இதன் மூலம் 984 கோடி அளவிற்கு சேமிக்க முடிந்துள்ளது.


புற்றுநோய்க்கு எதிரான மருந்துகளின் இலாபத்தை குறைக்க, பொது நலன் நோக்கில் NPPA எடுத்த முடிவை அகில இந்திய மருந்து நடவடிக்கை வலையமைப்பும் (AIDAAN) பாராட்டியுள்ளது. இன்றும் கூட, இந்தியா (India) உட்பட உலகம் முழுவதிலும், இறப்புகளுக்கு காரணமான தொற்றுநோயற்ற மற்றும் நீண்டகால நோய்களில், புற்றுநோய் மிக முக்கியமான நோய்களில் ஒன்றாகும்.


மேலும் படிக்க | Corona Side Effect: 40% நோயாளிகளுக்கு காதுகளில் buzzing ஒலி: UK ஆய்வு


உலக சுகாதார அமைப்பின் (WHO) கருத்துப்படி, அதிகபட்ச இறப்புகளின் அடிப்படையில் புற்றுநோய் உலகில் இரண்டாவது இடத்தில் உள்ளது என்று NPPA கூறியது. 2018 ஆம் ஆண்டில், உலகில் சுமார் 18 மில்லியன் புற்றுநோய்கள் இருந்தனர். அவற்றில் 1.5 மில்லியன் இந்தியாவில் மட்டுமே உள்ளனர். உலகில் புற்றுநோயால் ஏற்படும் 9.5 மில்லியன் இறப்புகளுடன் ஒப்பிடும்போது, ​​2018 ஆம் ஆண்டில் இந்தியாவில் 0.8 மில்லியன் இறப்புகள் ஏற்பட்டன. இந்தியாவில் புதிய புற்று நோயாளிகளின் எண்ணிக்கை 2040 ஆம் ஆண்டில் இரட்டிப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த நோயால் பாதிக்கப்பட்ட ஏழைக் குடும்பங்களுக்கு சிறந்த மருத்துவ வசதிகளையும் நிதி உதவிகளையும் வழங்க ஆயுஷ்மான் பாரதத்தின் கீழ் பிரதான் மந்திரி ஜான் ஆரோக்ய யோஜனா (PM-JAY) செயல்படுத்தப்படுகிறது. இதன் கீழ், ஒவ்வொரு பயனாளிக்கும் ஆண்டுக்கு ரூ .5 லட்சம் சுகாதார காப்பீடு வழங்கப்படுகிறது.


மேலும் படிக்க | ஆபரேஷன் செய்யும் போது மருத்துவர்கள் ஏன் நீலம் அல்லது பச்சை நிற ஆடையை அணிகிறார்கள்..!!!


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR