7வது சம்பள கமிஷன், ஃபிட்மெண்ட் ஃபாக்டர் சமீபத்திய புதுப்பிப்பு: மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் ஒரு பெரிய பரிசை அரசு வழங்கலாம். உண்மையில் மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் அதிகரிக்கப்படலாம் என்று நம்பப்படுகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில் அரசு ஊழியர்களுக்கு இந்த பெரிய அறிவிப்பை வெளியிடலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் புதிய சம்பள கமிஷன் குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றாலும், ஊழியர்களின் அகவிலைப்படி 50% ஆக இருப்பதால், அவர்களின் குறைந்தபட்ச சம்பளம் மீண்டும் ஒருமுறை திருத்தப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அடிப்படை சம்பளத்தில் 8000 நேரடி உயர்வு சாத்தியம்:
அதேபோல் 50 லட்சம் மாநில ஊழியர்களுக்கு மத்திய அரசு ஒரு முக்கிய முடிவை எடுக்கலாம். அதன்படி அவர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்த அரசால் முடியும். இது நடந்தால், மத்திய ஊழியர்களின் அடிப்படை சம்பளம் ரூபாய் 8000 நேரடியாக உயர்த்தப்படும். அதேபோல் மத்திய ஊழியர்களின் ஃபிட்மென்ட் ஃபாக்டரில் (Fitment Factor) திருத்தம் செய்யப்பட்டதால், அடிப்படை சம்பளம் ரூ.18000 இல் இருந்து ரூ.26000 ஆக (Salary Hike) உயரலாம். இருப்பினும் இது தொடர்பாக ​​மத்திய அரசு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | ரேஷன் கார்டுதாரர்களுக்கு இன்று முதல் ஜாக்பாட்.. உடனே இதை படியுங்கள்


ஊழியர் சங்கத்தின் கோரிக்கை:
இதைக்கிடையில் ஊழியர் சங்கத்தின் கோரிக்கையில் படி, ஃபிட்மென்ட் ஃபாக்டர் 3.68 ஆக அதிகரிக்கப்பட வேண்டும் என்று வைக்கப்பட்டுள்ளது, ஆனால் அதை அரசு தரப்பில் இருந்து மூன்று சதவீதம் மட்டுமே அதிகரிப்பு செய்யப்படும் என்று கூறப்படுகிறது. தற்போது அரசு ஊழியர்களின் ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.57 ஆகவும், அவர்களின் அடிப்படை சம்பளம் ரூ 18000 ஆகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


ஊழியர் சங்கத்தின் கோரிக்கையின் படி ஃபிட்மென்ட் ஃபாக்டரை 3.68 ஆக உயர்த்தினால் அடிப்படை சம்பளம் ரூ.26000 ஆகிவிடும். குறைந்தபட்ச சம்பளம் ரூ.18000 எனில், அலவன்ஸ்கள் தவிர்த்து, அவர்களுக்கு 2.57 அடி வீதம் ரூ.46260 வழங்கப்படுகிறது, அதேசமயம் ஃபிட்மென்ட் காரணி 3.68 ஆக இருந்தால், அவர்களின் சம்பளம் ரூ.95680 வரை உயரும்.


விரைவில் 4% அகவிலைப்படி உயர்வு:
அடிப்படை சம்பளத்தை அதிகரிப்பதுடன், அகவிலைப்படி, வீட்டு வாடகை கொடுப்பனவு மற்றும் (HRA) பல வகையான கொடுப்பனவுகள் இதில் சேர்க்கப்படுகின்றன. அதன்பிறகுதான் ஊழியர்களின் சம்பளம் கணக்கிடப்படுகிறது. இதற்கு முன், ஜூலை அரையாண்டுக்கான ஊழியர்களின் அகவிலைப்படியில் (DA Hike) நான்கு சதவீத உயர்வைக் காணலாம். இதற்கான ஏஐசிபிஐ புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன. விரைவில் மத்திய அரசு அகவிலைப்படியை 4% உயர்த்தலாம். மேலும், அகவிலைப்படி 46 சதவீதமாக உயரும். DA 46% ஆக இருந்தால், மத்திய ஊழியர்களின் சம்பளம் மீண்டும் ஒருமுறை உயர்த்தப்படும். எனவே இதன் மூலம் கூடிய விரைவில் மத்திய அரசு ஊழியர்களின் கணக்குகளுக்கு இரண்டு முக்கிய பரிசுகளை வழங்க உள்ளது என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.


செப்டம்பரில் ஹைக் அறிவிக்கப்படலாம்:
அரசு ஊழியர்களுக்கு விரைவில் அதாவது இந்த மாதம் (செப்டம்பர் மாதத்தில்) அகவிலைப்படி உயர்வை (DA Hike) வழங்க முடியும். அதன்படி 2023 ஜனவரி முதல் ஜூலை வரையிலான அகவிலைப்படி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இம்முறையும் அகவிலைப்படி 4 சதவீதம் அதிகரிக்கப்பட உள்ளது. தற்போது ஊழியர்களின் அகவிலைப்படி 42 சதவீதமாக உள்ளது. அரசு ஊழியர்களுக்கு உயர்வு அறிவிப்புக்கு பின், இது 46 சதவீதத்தை எட்டும் எனது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | இரவு நேர ரயில் பயண விதிகளில் மாற்றம்: இனி இந்த நேரத்தில் தூங்க முடியாது.. முக்கிய தகவல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ