இரவு நேர ரயில் பயண விதிகளில் மாற்றம்: இனி இந்த நேரத்தில் தூங்க முடியாது.. முக்கிய தகவல்

Indian Railways: அடிக்கடி ரயிலில் பயணம் செய்பவர்கள் ரயில்வே வாரியம் அவ்வப்போது மாற்றியமைக்கும் விதிகள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 15, 2023, 11:20 AM IST
  • ரயில் பயணத்தில் ஒரு முக்கிய அப்டேட்.
  • முன்பு இருந்த நேரம் தற்போது மாறி விட்டது.
  • நேரம் 9 மணி நேரத்திலிருந்து 8 மணி நேரமாகக் குறைக்கப்பட்டது.
இரவு நேர ரயில் பயண விதிகளில் மாற்றம்: இனி இந்த நேரத்தில் தூங்க முடியாது.. முக்கிய தகவல் title=

இந்தியன் ரயில்வே: இந்தியன் ரயில்வே நம் நாட்டு மக்களின் போக்குவரத்தின் உயிர் நாடியாக இருந்து வருகிறது. மக்கள் தொகை அதிகம் உள்ள நமது நாட்டில், மக்களின் போக்குவரத்தை பொறுத்தவரையில், ரயில்களுக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. ரயிலில் பயணிக்கும் பயணிகளின் வசதிக்காக இந்தியன் ரயில்வே பல வித வசதிகளை செய்கிறது. அவ்வப்போது பல புதிய விதிகள் இயற்றப்படுகின்றன. சில விதிகள் மாற்றப்படுகின்றன. கோடிக்கணக்கான பயணிகளுக்கு சிறப்பு நிபந்தனைகளின் கீழ் சிறப்பு வசதிகள் வழங்கப்படுகின்றன.  

அடிக்கடி ரயிலில் பயணம் செய்பவர்கள் ரயில்வே வாரியம் அவ்வப்போது மாற்றியமைக்கும் விதிகள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். கடந்த காலங்களில், பயணிகளுக்கு பொருந்தும் சில விதிகளை ரயில்வே மாற்றியது.

இந்த விதிகளில் ஒன்று ரயிலின் ஸ்லீப்பர் மற்றும் ஏசி கோச்சில் இரவு நேர பயணம், குறிப்பாக தூங்குவது தொடர்பானது. அதாவது, தற்போது ரயில்களில் தூங்கும் நேரத்தை ரயில்வே மாற்றியுள்ளது. முன்னதாக, ரயில்வே வாரியம் சார்பில், பயணிகள் அதிகபட்சமாக ஒன்பது மணி நேரம் தூங்க அனுமதிக்கப்பட்டது. ஆனால் தற்போது இந்த கால அவகாசம் 8 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது.

முன்பு இருந்த நேரம் தற்போது மாறி விட்டது

விதியின்படி, முன்னர் பயணிகள் ஏசி கோச் மற்றும் ஸ்லீப்பரில் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை தூங்கலாம். ஆனால் ரயில்வே மூலம் மாற்றப்பட்ட விதிகளின்படி இனி இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே தூங்க முடியும். இதற்கு மேல் தூங்கினால், ரயில்வே கையேட்டின் படி அபராதமும் செலுத்த வேண்டியிருக்கும். இந்த மாற்றம் தூங்கும் வசதி கொண்ட ரயில்களில் மட்டுமே பொருந்தும். பயணிகளுக்கு தகுந்த வசதியை வழங்க வேண்டும் என்பதற்காகவே இந்திய ரயில்வே இந்த மாற்றத்தை அமல்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க | சிகரெட் பிரியர்களுக்கு ரயில்வே புதிய அப்டேட்.. உடனே தெரிந்துக்கொள்ளுங்கள்

நேரம் 9 மணி நேரத்திலிருந்து 8 மணி நேரமாகக் குறைக்கப்பட்டது

இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரையிலான நேரம் தூங்குவதற்கு ஏற்றதாகக் கருதப்படுகிறது. சில பயணிகள் இரவு 9 மணி முதல் 6 மணி வரையிலான இந்த நேரத்தில் இரவு உணவு சாப்பிடுவது உண்டு. இதனால் மற்ற பயணிகளுக்கு பிரச்சனைகள் ஏற்படுகின்றது. இப்போது இந்த நேரம் மாற்றப்பட்டுள்ளதால், பயணம் செய்யும் பயணிகள் இரவு 10 மணிக்குள் இரவு உணவை முடித்துக்கொண்டு தங்களுடைய பெர்த்தில் உறங்கி, வசதியாக பயணிக்க முடியும் என்று ரயில்வே நம்புகிறது. இந்த நேர மாற்றத்திற்கு மற்றொரு காரணமும் உள்ளது. மிடில் பெர்த்தில் பயணிப்பவர்கள் விரைவில் தூங்கி விடுவதால் கீழ் பெர்த்தில் பயணிப்பவர்களுக்கு பிரச்சனை வருவதாகவும் பயணிகள் நீண்ட நாட்களாக புகார் தெரிவித்து வருகின்றனர். இப்போது இந்த விதி மாற்றத்தால் இதற்கும் ஒரு தீர்வு கிடைக்கும். 

இதுபோன்ற புகார்கள் மற்றும் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, ரயில்வே தூங்கும் நேரத்தை மாற்றியுள்ளது. புதிய விதியின்படி, மிடில் பெர்த் பயணிகள் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தூங்கலாம். அதன் பிறகு அவர்கள் பெர்த்தை காலி செய்ய வேண்டும். இந்த நேரத்திற்கு முன்போ அல்லது பின்னரோ பயணிகள் தூங்குவதால் சக பயணிகளுக்கு தொந்தரவு ஏற்பட்டால், அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் செய்யலாம். இந்த விதிகளை மீறும் பயணிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு, இந்த விதியை 2017ம் ஆண்டு ரயில்வே நிர்வாகம் அமல்படுத்தியது. 

மாறிவரும் சூழலுக்கு ஏற்பவும், பயணிகளின் பயண அனுபவத்தை மேம்படுத்தவும் இந்திய ரயில்வே அவ்வப்போது விதிகளில் பல மாற்றங்களை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | NPS: இந்த திட்டத்தில் மாதம் ரூ. 5 ஆயிரம் முதலீடு செய்தால் ஓய்வுக்கு பின் ஜம்முனு இருக்கலாம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News