BSNL 5G Launch Date: மார்ச் 2023க்குள் 200 நகரங்களில் 5ஜி நெட்வொர்க்! வாவ்!
மார்ச் 2023க்குள் நாட்டின் 200க்கும் மேற்பட்ட நகரங்களில் 5ஜி சேவை கிடைக்கும் என்று மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
இந்தியாவில் பிஎஸ்என்எல் 5ஜி வெளியீட்டு தேதி: பிரதமர் நரேந்திர மோடி நாட்டில் 5ஜி மொபைல் சேவையை தொடங்கினார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற, மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறியதாவது., வரும் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள், நாட்டின் 200க்கும் மேற்பட்ட நகரங்கள் 5ஜி சேவையை மக்கள் பெறுவார்கள்.
ஆகஸ்ட் 15, 2023 முதல் பிஎஸ்என்எல்லின் 5ஜி சேவை
ஆகஸ்ட் 15, 2023 முதல் பிஎஸ்என்எல் 5ஜி சேவையைத் தொடங்கும் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற இந்திய மொபைல் காங்கிரஸ் (ஐஎம்சி-2022) நிகழ்ச்சியின் ஆறாவது பதிப்பில் அமைச்சர் அஸ்வனி இந்த முக்கிய விஷயங்களை தெரிவித்தார்.
மேலும் படிக்க | 5ஜி நெட்வொர்க்கை ஈஸியாக பெறலாம்; புது சிம்கார்டு வாங்க வேண்டுமா?
நாட்டின் 90 சதவீத பகுதிகளில் 5ஜி சேவை இருக்கும்
ஆகஸ்ட் 15, 2023 முதல், அரசாங்கத்தால் நடத்தப்படும் தொலைத்தொடர்பு சேவை வழங்குநரான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) தனது 5ஜி சேவையை நாட்டில் அறிமுகப்படுத்தும் என்று தொலைத்தொடர்பு அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். அடுத்த இரண்டு ஆண்டுகளில், நாட்டின் 80-90 சதவீத பகுதிகளில் 5 சேவைகளை வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
முதலில் இந்த நகரங்களில் 5ஜி சேவை கிடைக்கும்
நாடு முழுவதும் குறைந்த விலையில் 5ஜி சேவையை வழங்குவதாக ஜியோ உறுதியளித்துள்ளது. தீபாவளியை ஒட்டி, டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னை போன்ற நாட்டின் 4 முக்கிய நகரங்களில் 5ஜி சேவை கிடைக்கும் என்று ஜியோ தெரிவித்துள்ளது . அதே நேரத்தில், 5ஜி சேவைக்கான சோதனை ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாக ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. முதற்கட்டமாக நாட்டின் 8 நகரங்களில் 5ஜி சேவை வழங்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், 5ஜி சேவையை தொடங்குவது குறித்து Vi அல்லது வோடபோன்-ஐடியா எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.
சேவை விரைவில் தொடங்கும்
டெலிகாம் சேவை வழங்குனர்களான ஏர்டெல், வோடபோன்-ஐடியா மற்றும் ஜியோ ஆகியவை வாடிக்கையாளர்களுக்கான இந்த சேவை மற்றும் டேட்டா இணைப்புத் திட்டம் பற்றிய தகவல்களை இன்னும் வழங்கவில்லை. ஏர்டெல் மற்றும் ஜியோ இந்த மாதத்தில் 5ஜி சேவையை தொடங்குவதாக தங்கள் சந்தாதாரர்களுக்கு உறுதியளித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ