அடிக்கடி மொபைலின் பேட்டரி குறைவது மற்றும் ஹேங் ஆகும் பிரச்சனை உங்களுக்கு இருந்து, புதிய மொபைல் வாங்கும் எண்ணம் இருந்தால் இது உங்களுக்கு சரியான தருணம். லேட்டஸ்ட் ஆஃபர்களில் எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் 40 விழுக்காடு தள்ளுபடி என பல சலுகைகளுடன் 12 ஜிபி ரேம் போன்கள் விற்பனைக்கு வந்துள்ளன. காஷ்பேக் ஆஃபரும் உங்களுக்கு இருக்கிறது.
1-iQOO Neo 6 5G மொபைல்
12 ஜிபி ரேம் கொண்ட இந்த மொபைல் வேகமாக இயங்கும். இந்த போனில் நீங்கள் ஒரே நேரத்தில் எத்தனை ஆப்ஸைத் திறந்தாலும், போன் மெதுவாகவோ அல்லது செயலிழக்கவோ செய்யாது. 12ஜிபி ரேம் கொண்ட மலிவான விலையில் கிடைக்கும் போன் இதுவாகும். இதன் விலை ரூ.39,999. ஆஃபரில் 20% தள்ளுபடி உள்ளது. எஸ்பிஐ வங்கி கார்டுகளுடன் இந்த போனை வாங்கினால் ரூ.1,500 வரை உடனடி கேஷ்பேக் மற்றும் ரூ.12,250 எக்ஸ்சேஞ்ச் போனஸ் கிடைக்கும்.
2-Xiaomi 11T Pro 5G போன்
இந்த போனின் விலை 54,999. ஆனால் சலுகையில் முழு 29% தள்ளுபடியில் விற்பனையாகிறது. இதனால் ரூ.38,999-க்கு நீங்கள் வாங்கலாம். எஸ்பிஐ வங்கி கார்டு மூலம் போனை வாங்கினால் ரூ.2000 உடனடி கேஷ்பேக் மற்றும் ரூ.17,650 ஆயிரம் எக்ஸ்சேஞ்ச் போனஸ் கிடைக்கும். போனின் சிறப்பு அதன் 12ஜிபி ரேம், இதில் 56ஜிபி சேமிப்பு உள்ளது.
3-OnePlus Nord 2T 5G (கிரே ஷேடோ, 12 ஜிபி சேமிப்பு, 256 ஜிபி சேமிப்பு)
12ஜிபி ரேம்களில் கிடைக்கும் போன்களில் இதுவும் ஒன்று. நீங்கள் குறைந்த விலையில் 12ஜிபி ரேம் போன் வாங்க விரும்பினால் onePlus Nord 2T 5G போன் சிறந்தது. இந்த போனின் விலை ரூ.33,999 முதல் தொடங்குகிறது. எஸ்பிஐ வங்கி கார்டு மூலம் போனை வாங்கினால் 3000 ரூபாய் உடனடி கேஷ்பேக் மற்றும் ஆயிரம் ரூபாய் தள்ளுபடி கூப்பன் கிடைக்கும். போனில் ரூ.12,650 வரையிலான எக்ஸ்சேஞ்ச் போனஸ் உள்ளது.
4-Samsung Galaxy S21 Ultra 5G
இந்த போனின் விலை ரூ. 1,28999. ஆனால் ஆஃபரில் 39% தள்ளுபடி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனில் 256ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 12ஜிபி ரேம் உள்ளது. சாம்சங் சமீபத்தில் அறிமுகப்படுத்திய Galaxy Fold 4 மற்றும் Galaxy Flip 4 ஆகியவையும் 12GB RAM விருப்பத்தைக் கொண்டுள்ளன.
மேலும் படிக்க | திடீரென காணாமல் போகும் நெட்வொர்க்: வோடாஃபோன் ஐடியா வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ