பிரதமர் நரேந்திர மோடி 5ஜி இணைய சேவையை தொடங்கி வைத்துள்ளார். முதல் கட்டமாக 13 நகரங்களில் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. அகமதாபாத், பெங்களூரு, சண்டிகர், சென்னை, டெல்லி, காந்திநகர், குருகிராம், ஹைதராபாத், ஜாம்நகர், கொல்கத்தா, லக்னோ, மும்பை மற்றும் புனே ஆகிய நகரங்கள் 5ஜி சேவையை பெற இருக்கின்றன. இதன் பிறகு நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் 5ஜி வழங்கப்பட உள்ளது.
5ஜி சேவை தொடங்குவதற்கு முன்பே ஸ்மார்ட்போன் மார்க்கெட்டில் 5ஜி ஸ்மார்ட்போன்கள் வந்துவிட்டன. இந்த சேவை தொடங்கப்பட்டவுடன் அதிவேக 5ஜி இணையத்தை பெற வேண்டும் என்பது வாடிக்கையாளர்களின் விருப்பமாக இருக்கிறது. காரணம் இதில் இருக்கும் இணைய வேகம். 10 வினாடிகளில் ஒரு முழுப் படத்தையும் நீங்கள் பதிவிறக்கம் செய்துவிட முடியும். இருப்பினும், 5ஜி நெட்வொர்க் வந்த பிறகு, 5ஜி சிம் எப்படி கிடைக்கும்? என்ற கேள்வி பொதுவாக உள்ளது. 5G சிம் கார்டில் எனது பழைய எண்ணை எவ்வாறு பயன்படுத்துவது? என்பது போன்ற கேள்விகளும் இருகின்றன. அதனைப் பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.
சிம்மில் எந்த மாற்றமும் இல்லை
இப்போதைய சூழலில் மார்க்கெட்டில் 2ஜி, 3ஜி மற்றும் 4ஜி சிம்கள் உள்ளன. ஃபீச்சர் போன் வாடிக்கையாளர்கள் 2ஜி சிம் பயன்படுத்தும் நிலையில், 3ஜி மற்றும் 4ஜி சிம் கார்டுகளை ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்கள் பயன்படுத்துகின்றனர். 5G சிம் என்பது விரைவில் அறிமுக்கபடுத்தப்பட இருக்கிறது. அது தற்போதைய 4G சிம் போல இருக்கும். 4ஜி சிம்மின் அளவு மற்றும் வடிவத்தில் எந்த மாற்றமும் இருக்காது.
4ஜி சிம் கார்டில் 5ஜி நெட்வொர்க்
நீங்கள் தற்போது எந்த நிறுவனத்தின் 4ஜி சிம் பயன்படுத்துகிறீர்களோ, அதே சிம் கார்டு மூலம் 5ஜி நெட்வொர்க்கை பெற முடியும். இருப்பினும், இது எப்படி சாத்தியமாகும்? என்ற கேள்வி இருக்கிறது. 4ஜியில் இருந்து உங்கள் சிம்கார்டை 5ஜிக்கு மாற்ற சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் விரைவில் வழிமுறைகளை வெளியிடுவார்கள். அதனைப் பின்பற்றி 4ஜி சிம்கார்டை 5ஜியாக மாற்றிக் கொள்ளலாம். அதனால் புதிய சிம் கார்டு பெற வேண்டிய அவசியம் இருக்காது.
எந்த மொபைல் போன்களில் 5G சிம் இருக்கும்?
5ஜி சிம்மை 5ஜி போன்களில் மட்டுமே பயன்படுத்த முடியும். மேலும், 5ஜி போன்களை வாங்கிய மொபைல் யூசர்கள் தனியாக 5ஜி சிம் வாங்க வேண்டியதில்லை. வாடிக்கையாளர்கள் தங்கள் 4G சிம்மில் இருந்தே 5G நெட்வொர்க்குடன் இணைக்க முடியும்.
5ஜி திட்டத்தை வாங்க வேண்டும்
4ஜி சிம்கார்டில் இருந்து நீங்கள் 5ஜி நெட்வொர்கிற்கு மாறிவிட்டீர்கள் என்றால், அதற்கேற்ப 5ஜி பிளானை மட்டுமே நீங்கள் பயன்படுத்த முடியும். 5ஜி பிளான்கள் மற்றும் டேட்டா குறித்த விவரங்களை, 5ஜி நெட்வொர்க் நடைமுறைக்கு வந்த பின்னர் அந்தந்த நிறுவனங்கள் அறிவிக்க இருக்கின்றன.
மேலும் படிக்க | ஏர்டெல் யூஸ் பண்றிங்களா! உங்களுக்கு தான் முதலில் 5ஜி; அதுவும் 4ஜி விலையில்...
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ