DA Hike: மத்திய அரசு ஊழியர்கள் மீது பண மழை: ஒரே நேரத்தில் 3 குட் நியூஸ்
Central Govt Employees DA Hike: அகவிலைபப்டி அதிகரிப்புடன், வீட்டு வாடகை கொடுப்பனவும் அதிகரிக்கலாம். இது தவிர, ஃபிட்மென்ட் ஃபாக்டரை அதிகரிப்பது குறித்தும் அரசு பரிசீலிக்கலாம்
DA Hike For Govt Employees, 7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. இந்த ஆண்டு நடக்கவுள்ள மக்களவை தேர்தலுக்கு முன்னதாக, மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் 3 பெரிய பரிசுகளை பெறக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேர்தலுக்கு முன், மோடி அரசு, மீண்டும் அகவிலைப்படியை (Dearness Allowance), 4 சதவீதம் உயர்த்தலாம் என, செய்திகள் வெளியாகி உள்ளன. அகவிலைபப்டி அதிகரிப்புடன், வீட்டு வாடகை கொடுப்பனவும் அதிகரிக்கலாம். இது தவிர, ஃபிட்மென்ட் ஃபாக்டரை அதிகரிப்பது குறித்தும் அரசு பரிசீலிக்கலாம் என கூறப்படுகின்றது. இதன் காரணமாக அடிப்படை சம்பளம் ரூ.18,000 -இல் இருந்து ரூ.26,000 ஆக உயரும். தேர்தலுக்கு முன் இந்த மூன்றையும் மோடி அரசாங்கம் செய்தால், ஊழியர்களின் சம்பளத்தில் பெரும் ஏற்றம் ஏற்படும். இருப்பினும், இதற்கான அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இன்னும் வெளிவரவில்லை.
ஹோலி பண்டிகையின் போது அகவிலைப்படி அதிகரிப்பு பற்றிய அறிவிப்பு வரலாம்
ஹோலி பண்டிகையை ஒட்டி, மீண்டும் மத்திய ஊழியர்கள் (Central Government Employees) மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியை 4 சதவீதம் அதிகரிப்பதற்கான அறிவிப்பு வெளியாகலாம். இந்த மதிப்பீடு ஜூலை முதல் நவம்பர் வரையிலான தொழிலாளர் அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட ஏஐசிபிஐ குறியீட்டின் (AICPI Index) குறியீட்டின் தரவுகளிலிருந்து எடுக்கப்படுகின்றது. தற்போது மத்திய ஊழியர்கள் 46 சதவிகித அகவிலைப்படியை பெற்று வருகின்றனர். இது 4 சதவிகிதம் உயர்த்தப்பட்டால், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் (Pensioners) மொத்த அகவிலைப்படி 50 சதவியகிதமாக அதிகரிக்கும்.
அகவிலைப்படி உயர்வு (DA Hike) குறித்த அறிவிப்பு மார்ச் மாதம் வந்தாலும், இது ஜனவரி 2024 முதல் அமலுக்கு வரும். ஆகையால், ஜனவரி முதல் மார்ச் வரையிலான அகவிலைப்படி அரியர் தொகையும் ஊழியர்களுக்கு கிடைக்கும். ஹோலி பண்டிகைக்கு முன் எப்போது வேண்டுமானாலும் இதாற்கான அறிவிப்பு வர வாய்ப்புள்ளது.
அகவிலைபப்டியின் புதிய விகிதங்களுக்குப் பிறகு DA 50% அல்லது 51% ஐ எட்டினால், ஊழியர்களின் சம்பளம் திருத்தப்படும். ஏனெனில் 7வது ஊதியக் குழுவின் (7th Pay Commission) பரிந்துரைகளின் படி, அகவிலைப்படி 50% அடையும் போது அகவிலைப்படி பூஜ்ஜியம் ஆக்கப்பட்டு அகவிலைபப்டி தொகை அடிப்படை சம்பளத்துடன் சேர்க்கப்படும். எனினும் இதற்கான அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இன்னும் வழங்கப்படவில்லை.
ஃபிட்மெண்ட் ஃபாக்டர்
பட்ஜெட் கூட்டத்தொடரின் போது மோடி அரசாங்கம் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் (Fitment Factor) குறித்த பெரிய முடிவை எடுக்கக்கூடும் என ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. தற்போது மத்திய அரசு ஊழியர்களின் ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.57 ஆகவும், அடிப்படை சம்பளம் 18,000 ரூபாயாகவும் உள்ளது. இதை 3.68 ஆக உயர்த்த வேண்டும் என்று ஊழியர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது நடந்தால் ஊழியர்களின் ஊதியத்தில் மிகப்பெரிய ஏற்றத்தை காணலாம். ஊழியர்களின் ஃபிட்மென்ட் ஃபாக்டர் 3.00 அல்லது 3.68 சதவீதமாக உயர்த்தப்பட்டால், அடிப்படை சம்பளம் ரூ.8000 அதிகரித்து, ரூ.18000ல் இருந்து ரூ.26000 ஆக உயரும். ஆனால், இதுவரை அரசு தரப்பிலிருந்து இது உறுதி செய்யப்படவில்லை.
மேலும் படிக்க | இந்திய ரயில்வேயின் புதிய விதிகள்! இனி இவர்களுக்கு மட்டுமே லோயர் பெர்த்!
உதாரணமாக, ஒரு மத்திய ஊழியரின் அடிப்படை சம்பளம் ரூ.18,000 எனில், அலவன்ஸ்கள் தவிர்த்து, அவரது சம்பளம் ரூ.18,000 X 2.57 = ரூ.46,260 ஆக இருக்கும். ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 3.68 ஆனால், அவரது சம்பளம் ரூ.95,680 (26000 X 3.68 = 95,680) ஆகும். அதாவது ஊதியத்தில் 49,420 ரூபாய் உயர்வு இருக்கும்.
HRA இல் 3 சதவீதம் அதிகரிப்பு இருக்கும்
அகவிலைப்படி உயர்வுடன், ஊழியர்களின் வீட்டு வாடகைப்படியும் (House Rent Allowance) 3% அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், நிதித்துறையின் குறிப்பாணையின்படி, டிஏ (DA) 50% ஐ தாண்டும்போது HRA அதிகரிக்கப்படும்.தற்போது மத்திய ஊழியர்களுக்கு 46% டிஏ வழங்கப்படுகிறது. ஊழியர்களின் அதிகபட்ச HRA 27% ஆக உள்ளது. ஜனவரி 2024 -க்கான புதிய டிஏ விகிதங்களின் அறிவிப்பு மார்ச் மாதத்திற்குள் வரும் என கருதப்படுகிறது. அகவிலைப்படியில் 4% அதிகரிப்பு இருக்கலாம். அதன் பிறகு அது 50% ஐ எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில் HRA மேலும் 3% அதிகரிக்கும். அதன் பிறகு அதிகபட்ச HRA 27% -லிருந்து 30% ஆக அதிகரிக்கும்.
அரசு ஊழியர்களுக்கு அவர்கள் பணிபுரியும் நகரத்திற்கு ஏற்ப வீட்டு வாடகை கொடுப்பனவு வழங்கப்படுவதால், வீட்டு வாடகை கொடுப்பனவில் 3 பிரிவுகள் உள்ளன. இதில், 50 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்கள் ‘எக்ஸ்’ பிரிவில் வருகின்றன. 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்கள் ‘ஒய்’ பிரிவில் வருகின்றன.5 லட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட நகரங்கள் ‘இசட்’ பிரிவில் வருகின்றன. மூன்று பிரிவினருக்கும் குறைந்தபட்ச ஹெச்ஆர்ஏ ரூ.5400, 3600 மற்றும் ரூ.1800 ஆக உள்ளது. தற்போது எக்ஸ் பிரிவு ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளத்தில் 27 சதவீதமும், ஒய் பிரிவு ஊழியர்களுக்கு 18 முதல் 20 சதவீதமும், இசட் பிரிவினருக்கு 9 முதல் 10 சதவித HRA வழங்கப்படுகின்றது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ