மத்திய அரசின் கீழ் பணிபுரியும் ஊழியர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து தவமிருந்த ஒரு நல்ல செய்தி நடக்கப்போவதாக பல தகவல்கள் தொடர்ந்து வெளியாகிக்கொண்டே இருக்கிறது.  அந்த நல்ல செய்தி என்னவென்றால் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு தான். இந்த செய்தி நவராத்திரியின் போது அதாவது செப்டம்பர் 28 ஆம் தேதியில் வெளியாகக்கூடும் என்று சில செய்திகள் நம்பிக்கை அளிக்கும் விதமாக ஹெரிவிக்கின்றது.  அகவிலைப்படி உயர்வு குறித்து வெளிவரும் செய்திகள் சிலசமயம் மகிழ்ச்சியை அளித்தாலும் ஒருபுறம் அரசு தரப்பில் இருந்து இதுகுறித்த எவ்வித அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளிவராதது அரசு ஊழியர்களுக்கு கவலையையும் குழப்பத்தையும் அளிப்பதாக இருக்கிறது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பொதுவாக மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி ஒரு ஆண்டில் இரண்டு முறை திருத்தியமைக்கப்படுகிறது, அதாவது ஜனவரி முதல் ஜூன் வரையில் ஒன்றும், ஜூலை முதல் டிசம்பர் வரை ஒன்றும் என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. அகில இந்திய சிபிஐ-ஐடபிள்யூ வெளியிட்டுள்ள செய்தியின்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்படும், இதன்மூலம் அவர்களின் மொத்த அகவிலைப்படி 38 சதவீதமாக உயரும் என்று கூறப்படுகிறது.  மேலும் சில செய்திகள் கூறுகையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த மாதத்தில் அகவிலைப்படி உயர்வு கிடைப்பது மட்டுமின்றி அதனுடன் சேர்த்து அவர்களுக்கு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்திற்கான நிலுவைத் தொகையும் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.  



மேலும் படிக்க | 7th Pay Commission: டிஏ உயர்வுக்கு முன் ஊழியர்களுக்கு ஷாக்! இந்த விதியை மாற்றியது அரசு


கடந்த ஏப்ரல் மாதத்தில் அகில இந்திய சிபிஐ-ஐடபிள்யூ 1.7 புள்ளிகள் அதிகரித்து 127.7 ஆக இருந்தது, இது முந்தைய மாதத்துடன் ஒப்பிடும்போது 1.35 சதவீதம் அதிகரித்துள்ளது.  மே மாத ஏஐசிபிஐ புள்ளிவிவரங்கள் 129 ஆக உள்ளது, ஜூன் மாத ஏஐசிபி புள்ளிவிவரங்களும் 129 ஆக உள்ளது.  நடப்பு ஆண்டிற்கான அகவிலைப்படி உயர்வு மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது.  டிசம்பர் 2021-ல், ஏஐசிபி எண்ணிக்கை 125.4 ஆக இருந்த நிலையில் 2022 ஜனவரியில் 0.3 புள்ளிகள் குறைந்து 125.1 ஆக சரிந்தது.  அடுத்ததாக பிப்ரவரி மாதத்தில் சிபிஐ-ஐடபிள்யூ 0.1 புள்ளிகள் குறைந்து 125.0 ஆக இருந்தது.  மார்ச் மாதத்தில், 1 புள்ளி அதிகரித்து 126 ஆக இருந்தது.  அரசு விலைவாசி உயர்வை சமாளிக்கும் வகையில் மத்திய அமைச்சரவை மார்ச் 30-ம் தேதி அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தை 3 சதவீதம் முதல் 34 சதவீதம் உயர்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | Train ticket Booking: ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவு விதிகளில் மாற்றம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ