Train ticket Booking: ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவு விதிகளில் மாற்றம்!

ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவு விதிகளில் மாற்றம் கொண்டு வர இருப்பதாக இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 22, 2022, 08:29 AM IST
  • ரயில்வே முன்பதிவு விதிகளில் மாற்றம்
  • விரைவில் மிகப்பெரிய மாற்றம் வரப்போகிறது
  • மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற திட்டம்
Train ticket Booking: ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவு விதிகளில் மாற்றம்! title=

Indian Railways Update: இந்திய ரயில்வே அவ்வப்போது பயணிகளின் வசதிக்காக புதிய அப்டேட்டுகள் மூலம் சேவையை மேம்படுத்தி வருகிறது. தற்போது டிக்கெட் முன்பதிவு முறையை புதுப்பிக்கும் பணியில் ரயில்வே ஈடுபட்டுள்ளது. இந்திய இரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா கழகத்தின் (IRCTC) ஆன்லைன் பயணிகள் டிக்கெட் முன்பதிவு முறையை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதனால் பயணிகள் பயணச்சீட்டு விலக்கு உள்ளிட்ட வசதியைப் பெற முடியும். உடனுக்குடன் பயணிகளின் கோரிக்கையும் நிறைவேற்றப்பட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

ரயில்வே கொடுத்திருக்கும் அப்டேட்

இந்திய ரயில்வேயின் பயணிகள் முன்பதிவு முறை குறித்த ரயில்வேயின் அறிக்கையை, அரசாங்கத்திடம் பகிர்ந்து கொண்டுள்ளது. பயணச்சீட்டு வழங்கும் முறையை நவீனப்படுத்த பல நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவித்துள்ள ரயில்வே அமைச்சகம், பல நேரங்களில் பயணிகள் ஆன்லைனில் டிக்கெட் பெறுவதில் ஏற்படும் சிரமங்களையும் களைய நடவடிக்கை எடுத்து வருவதாக கூறியுள்ளது. வரும் காலங்களில் ஆன்லைன் டிக்கெட் செயல்முறையை மிகவும் எளிதாகவும் வசதியாகவும் மாற்றும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறியுள்ளது. 

மேலும் படிக்க | ரயில்வே அமைச்சர் அளித்த மிகப்பெரிய தகவல்: பெண் பயணிகளுக்கு கிடைக்கும் கன்ஃபர்ம் சீட்!!

டிக்கெட்டுகள் முன்பதிவு 

அடுத்த தலைமுறை இ-டிக்கெட் (NGET) முறை தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருவதாக ரயில்வே தெரிவித்துள்ளது. 2016-17 ஆம் ஆண்டில் நிமிடத்திற்கு 15,000 டிக்கெட்டுகளாக இருந்த முன்பதிவு, 2017-18 ஆம் ஆண்டில் நிமிடத்திற்கு 18,000 டிக்கெட்டுகளாக அதிகரித்துள்ளது. 2018-19 ஆம் ஆண்டில் 20,000 டிக்கெட்டுகள் ஒரு நிமிடத்திற்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. தற்போது ஐஆர்சிடிசி இணையதளத்தில் நிமிடத்திற்கு 25,000 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் திறன் இருப்பதாக ரயில்வே தெரிவித்துள்ளது. மறுபுறம், மார்ச் 5, 2020 அன்று, ஒரு நிமிடத்தில் 26,458 டிக்கெட்டுகள் பதிவு செய்யப்பட்டது இன்றளவும் சாதனையாக இருக்கிறது. 

மேலும் படிக்க | IRCTC: திருவிழாவுக்கு ஊருக்கு போக ஈஸியா ரயில் டிக்கெட் புக் செய்யலாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News