7th Pay Commission: 4 சதவீத டிஏ அதிகரிப்பால் எவ்வளவு சம்பளம் உயரும் தெரியுமா?
7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கான அடுத்த கட்ட அகவிலைப்படி உயர்வுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
7th Pay Commission: இந்த முறை மத்திய ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வுக்கான காத்திருப்பு நீண்ட நாட்களாக இருந்தது. ஹோலி பண்டிகைக்கு முன்னதாக இது குறித்து முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இது குறித்து அரசு எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஆனால் அதற்கு மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (டிஏ) அடுத்த கட்ட உயர்வை மத்திய அரசு வெள்ளிக்கிழமை அனுமதித்துள்ளது. 2023 ஆம் ஆண்டின் முதல் டிஏ உயர்வுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று (மார்ச் 24) நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஏற்கனவே இருந்த டிஏ விகிதம் 38 சதவீதமாக இருந்தது. இந்த உயர்வு மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வருகிறது. ஓய்வூதியம் பெறுவோர் தங்கள் அகவிலை நிவாரணத்தில் (டிஆர்) 4 சதவீத உயர்வால் பயனடைவார்கள். இந்த உயர்வு 7வது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
“பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று 01.01.2023 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியின் கூடுதல் தவணையை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. கூடுதல் தவணையானது அடிப்படை ஊதியம்/ஓய்வூதியத்தின் தற்போதைய விகிதமான 38% ஐ விட 4% அதிகரிப்பைக் குறிக்கும், இது விலைவாசி உயர்வை ஈடுசெய்யும்” என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்வால் 47.58 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 69.76 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள். கருவூலத்தில் DA மற்றும் DR ஆகியவற்றின் ஒருங்கிணைந்த தாக்கம் ஆண்டுக்கு ரூ.12,815.60 கோடியாக இருக்கும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த மாத தொடக்கத்தில், பணியாளர்கள் ஓய்வூதியத் திட்டம் 1995ன் கீழ் தனிநபர்கள் தேசிய தலைநகரம் உட்பட 200 நகரங்களில் நாடு தழுவிய போராட்டத்திற்குத் திட்டங்களை அறிவித்தனர். ஓய்வூதியம் பெறுவோர், தங்களுக்கு மற்றும் வாழ்க்கைத் துணைவர்களுக்கு அகவிலைப்படி மற்றும் மருத்துவ வசதியுடன் மாதந்தோறும் ₹7,500 உயர் மாதாந்திர உதவித்தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் படிக்க | ரயில் பயணிகளின் கவனத்திற்கு..டிக்கெட்டில் இவ்ளோ விஷயம் இருக்கா
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ