4% அகவிலைப்படி உயர்வால் ஊழியர்களுக்கு இவ்வளவு நன்மைகளா?
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி 4% உயர்த்தப்பட்டுள்ளது.
ஊழியர்களுக்கு ஒரு ஆண்டில் இரண்டு முறை அகவிலைப்படி வழங்கப்டுகிறது. அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியும், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலை நிவாரணமும் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டில் கடந்த மார்ச் மாதம் அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 3% உயர்த்தி உத்தரவிட்டது, அதன்படி அதுவரை 31 சதவீதமாக இருந்த டிஏ 34 சதவீதமாக உயர்ந்தது. தற்போது வரை அரசு ஊழியர்களுக்கு 34 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது, இந்நிலையில் இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக உயர்த்தப்படும் அகவிலைப்படியானது 4% உயர்த்தப்பட்டுள்ளது. அரசு அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தியதால் அரசு ஊழியர்களுக்கு மொத்தமாக 38 சதவீதம் அகவிலைப்படி உயர்வு கிடைத்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று வாட்டிவதைத்ததால் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியில் தொய்வு ஏற்பட்டது.
மேலும் படிக்க | 7th Pay Commission: அகவிலைப்படி உயர்வால் கிடைக்கும் பம்பர் ஊதிய உயர்வு, கணக்கீடு இதோ
கொரோனா சமயத்தில் அரசு கிட்டத்தட்ட ரூ. லட்சம் கோடி ரிலீஃப் பேக்கஜை அறிவித்ததால் ஏற்பட்ட நிதி பற்றாக்குறை காரணமாக அரசாங்கம் அதன் ஊழியர்களுக்கு அகவிலைப்படியை வழங்குவதில் சிக்கல்கள் ஏற்பட்டது. இந்த சிக்கலால் மத்திய அரசு ஊழியர்களுக்கு 18 மாதங்கள் நிலுவை தொகை பாக்கியில் உள்ளது, இதற்காக ஊழியர்கள் காத்துகொண்டு இருக்கும் நிலையில் 4% அகவிலைப்படி உயர்ந்து மொத்தமாக 38% கிடைத்துள்ளது. இவ்வாறு அகவிலைப்படி உயர்த்தப்பட்ட பிறகு ஊழியர்களின் சம்பளம் ரூ.6840 முதல் ரூ.27,312 வரை உயரும். அரசின் இந்த முடிவால் தற்போதுள்ள 50 லட்சம் மத்திய ஊழியர்களும், 62 லட்சம் ஓய்வூதியதாரர்களும் நேரடியாகப் பயனடைவார்கள்.
பணியாளரின் HRA அவர்கள் பணிபுரியும் நகரத்தின் வகையால் தீர்மானிக்கப்படுகிறது. ஊடக அறிக்கைகளின்படி, X வகை நகரங்களில் வசிக்கும் அல்லது பணிபுரியும் அரசு ஊழியர்களின் எச்ஆஹ்ஏ 4-5 சதவிகிதம் அதிகரிக்கும். தற்போது, இந்த நகரங்களில் பணியாற்றும் ஊழியர்கள் அடிப்படை சம்பளத்தில் 27 சதவீதம் ஹெச்ஆர்ஏ பெறுகின்றனர். Y வகை நகரங்களுக்கு 2 சதவீதம் ஹெச்ஆர்ஏ அதிகரிப்பு சாத்தியமாகும். தற்போது, இந்த பணியாளர்களுக்கு 18-20 சதவீதம் ஹெச்ஆர்ஏ கிடைக்கிறது. Z வகை நகரங்களுக்கு 1 சதவீதம் அதிகரிக்கலாம். அவர்களுக்கு தற்போது 9-10 சதவீதம் என்ற விகிதத்தில் Y வழங்கப்படுகிறது.
மேலும் படிக்க | Indian Railways: வந்தே பாரத் விரைவு ரெயில் சோதனை ஓட்டம் வெற்றி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ