7th Pay Commission: நாளை புத்தாண்டு தொடங்கவுள்ளது. மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் இந்த புத்தாண்டில் பல வித நல்ல செய்திகளுக்காக காத்திருக்கிறார்கள். இவற்றில் முதன்மையானது ஜனவரி 2025 -க்கான அகவிலைப்படி உயர்வு பற்றியது. அகவிலைப்படி எவ்வளவு உயரும்? இது எப்போது அறிவிக்கப்படும்? இதை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Central Government Employees: மத்திய அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பு


7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், 1 கோடிக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு (Pensioners) மத்திய அரசு அகவிலைப்படி (டிஏ) மற்றும் அகவிலை நிவாரணம் (Dearness Relief) ஆகியவற்றை ஆண்டுக்கு இரண்டு முறை அதிகரிக்கின்றது. முதல் டிஏ உயர்வு ஜனவரி மாதமும், அடுத்த டிஏ உயர்வு ஜூலை மாதம் முதலும் அமலுக்கு வருகின்றன. ஜனவரி மாத அகவிலைப்படி உயர்வு வழக்கமாக மார்ச் மாதத்திலும் ஜூலை மாத அகவிலைப்படி உயர்வு வழக்கமாக செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்திலும் அறிவிக்கப்படுகின்றது. 


AICPI Index: ஏஐசிபிஐ குறியீட்டு எண்கள்


தொழிலாளர் அமைச்சகம் வெளியிடும் ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் அடிப்படையில் அகவிலைப்படி அதிகரிப்பு தீர்மானிக்கப்படுகின்றது. முந்தைய ஆண்டின் ஜூலை முதல் டிசம்பர் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் அடிப்படையில் ஜனவரி மாத அகவிலைப்படியும், ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் அடிப்படையில் ஜூலை மாத அகவிலைப்படியும் தீர்மானிக்கப்படுகின்றன.


Dearness Allowance: அகவிலைப்படி கணக்கீடு


டிஏவைக் கணக்கிடுவதற்கான சூத்திரம்: [(கடந்த 12 மாதங்களுக்கான சராசரி AICPI (அடிப்படை ஆண்டு 2001=100) – 115.76) / 115.76] x 100.


அக்டோபர் 2024 நிலவரப்படி, AICPI 144.5 ஆக உயர்ந்துள்ளது. நவம்பர் மற்றும் டிசம்பர் தரவுகள் வந்தவுடன் இது 145.3 ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அப்படி நடந்தால், மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் (Dearness Relief) ஆகியவை , 56% ஆக உயரும். தற்போது டிஏ மற்றும் டிஆர் 53% ஆக உள்ளன.


மேலும் படிக்க | ஓய்வூதியதாரர்களுக்கு புத்தாண்டில் குட் நியூஸ்: அதிரடி ஓய்வூதிய உயர்வு விரைவில்


Salary Hike: சம்பள உயர்வு எவ்வளவு இருக்கும்?


ஊதிய உயர்வு கணக்கீடு: ஒரு உதாரணத்தின் மூலம் இதை புரிந்து கொள்ளலாம். ஜனவரியில் டிஏ 56% ஆக அதிகரித்தால், மாத அகவிலைப்படி = ரூ.18,000 x 56% = ரூ.10,080 ஆக இருக்கும். ஜூலை 2024: டிஏDA விகிதம் 53%. இப்போதைய அகவிலைப்படி - ரூ.18,000 x 53% = ரூ.9,540/மாதம். வித்தியாசம்: மாதத்திற்கு ரூ.540 அல்லது ஆண்டுக்கு ரூ.6,480 இருக்கும். ஊழியர்களின் அதிகபட்ச சம்பளம் ரூ.2,50,000 ஆக உள்ளது. அகவிலைப்படி 3% உயர்ந்தால், டிஏ உயர்வு ரூ.7,500 ஆக இருக்கும். இந்த அதிகரிப்பு ஊழியர்களுக்கு நிதி நிவாரணம் மற்றும் சிறந்த பொருளாதார ஸ்திரத்தன்மையை வழங்கும்.  


Pension Hike: 


மத்திய அரசு ஓய்வூதியர்களுக்கு (Central Government Pensioners) தற்போது குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9,000 ஆக உள்ளது. அதிகபட்ச ஓய்வூதியம் ரூ.1,25,000 ஆகும். அகவிலை நிவாரணம் 3% அதிகரித்தால், இவற்றில் முறையே ரூ.270 மற்றும் ரூ.3,750 ஆக இருக்கும்.


DA Hike: அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு எப்போது?


நவம்பர் மற்றும் டிசம்பர் 2024 தரவு வந்தவுடன்தான் ஜனவரி 2025 -க்கான டிஏ உயர்வு தீர்மானிக்கப்படும். நவம்பர் தரவு ஜனவரி 1வது வாரத்தில் எதிர்பார்க்கப்படுகிறது. டிசம்பர் எண் பிப்ரவரி 2025 இல் வரும். அதாவது அடுத்த திருத்தம் பிப்ரவரி இறுதிக்குள் அல்லது மார்ச் மாதம் அறிவிக்கப்படலாம். அகவிலைப்படி உயர்வு எப்போது அறிவிக்கப்பட்டாலும் ஜனவரி மாதம் முதலான டிஏ அரியர் தொகை (DA Arrears) கிடைக்கும். 


மேலும் படிக்க | வரி அடுக்கு முதல் TDS வரை... 2024ம் ஆண்டில் அமலுக்கு வந்த புதிய வருமான வரி விதிகள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ