உலகின் மிகப்பெரிய ரயில் நெட்வொர்க்குகளில் ஒன்றாக கருதப்படும் இந்திய ரயில்வே 177 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டதாகும் . நாடு முழுவதும் உள்ள ரயில் வழித்தடங்களின் நீளம் சுமார் 68,000 கிலோமீட்டருக்கு மேல் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டது.
இந்தியா முழுவதும் பயணிகளுக்கு வசதியான பயணத்தை வழங்கும் இந்திய ரயில்வே பொதுமக்கள் நீண்ட கால பயணத்திற்கு தேர்ந்தெடுக்கும் முக்கிய போக்குவரத்தாகும். தினம் சுமார் 2.4 கோடி பயணிகள் ரயிலில் பயணிப்பதாக தரவுகள் கூறுகின்றன.
இந்திய ரயில்வே: தினம் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தும் முக்கிய போக்குவரத்தாக இருக்கும் இந்திய ரயில்வே, ரயில் பயணிகளின் பாதுகாப்பு மற்றும்சவசதிகளை கருத்தில் கொண்டு சில முக்கியமான விதிகளை வகுத்துள்ளது. இதனைப் பற்றி பயணிகள் தெரிந்து கொள்வது அவசியம்.
டிக்கெட் விதி: டிக்கெட் விதிகள் ரயில்வே கவுண்டரில் டிக்கெட் புக் செய்யும் காலம் மலையேறி விட்டது. தற்போது ஐ ஆர் சி டி சி தளத்தில் தான் பெரும்பாலான டிக்கெட் புண் பதிவு செய்கின்றனர். இந்நிலையில் நீங்கள் வைத்திருக்கும் நீட்டிக்கெட்டுடன், புகைப்பட அடையாள ஆவணம் ஒன்றை வைத்திருக்க வேண்டும் வேண்டியது கட்டாயமாகும்.
இ-டிக்கெட்: உங்கள் இ-டிக்கெட்டுடன், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, டிரைவிங் லைசன்ஸ், பாஸ்போர்ட் போன்ற புகைப்பட அடையாள ஆவணங்களில் ஏதாவது ஒன்றை வைத்திருக்க வேண்டும். அடையாள ஆவணம் இல்லை என்றால் என்றால், நீங்கள் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்ததாக கருதப்பட்டு, அபராதம் விதிக்கவும், ரயிலில் இருந்து இறக்கவும், டி டி இக்கு உரிமை உண்டு.
லக்கேஜ் விதிகள்: விமான பயணம் போலவே, ரயில் பயணிகளும், குறிப்பிட்ட அளவு லக்கேஜ் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகிறது. ஏசி பெட்டியில் பயணிப்பவர்கள் அதிகபட்சமாக 70 கிலோ இலக்கேஜ் எடுத்துச் செல்லலாம். ஸ்லீப்பர் வகுப்பில் பயணிப்பவர்கள் 40 கிலோ எடையுள்ள சாமான்கள் எடுத்துச் செல்லலாம். இந்த அளவை மீறும் போது கூடுதல் கட்டணம் விதிக்கப்படும்.
சத்தம் தொடர்பான விதிகள்: ரயிலில் பயணிப்பவர்கள் உரத்த குரலில் போனில் பேசுவது, அதிக சத்தத்தில் இசையை ப்ளே செய்வதும் கூடாது. வெயிலில் பயணிப்பவர்கள் மற்ற பயணிகளுக்கு அசௌகரியம் கொடுக்கக் கூடாது என்ற நோக்கில் இந்த விதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட பொருட்கள் ரயிலில் பயணம் செய்யும்போது, எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்கள், காளிதாஸ் சிலிண்டர், அமிலங்கள் வீட்டு ஆபத்தான ரசாயனங்கள், பட்டாசுகள், பெட்ரோல் கெரசின் போன்றவை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை.
பத்து மணி விதிகள்: டிடிஇ இரவு 10 மணிக்கு மேல், பயணிகளிடம் டிக்கெட் பரிசோதனை செய்யக்கூடாது. இரவு விளக்கை தவிர அனைத்து வழக்குகளும் அணைக்கப்பட்டு இருக்க வேண்டும். குழுவாக பயணிக்கும் பயணிகள் மற்றவர்களுக்கு இடைஞ்சல் கொடுக்கும் வகையில் 10 மணிக்கு மேல் அரட்டை அடித்தல, சத்தமாக பேசுதல் கூடாது.