7th Pay Commission: ஊழியர்களுக்கு நவராத்திரி பரிசு.. அதிரடியாக அதிகரிக்கவுள்ளது அகவிலைப்படி, கணக்கீடு இதோ
7th Pay Commission: பணத்தேவை அதிகமாகும் இந்த காலத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு மிக நல்ல செய்தி கிடைத்துள்ளது. இந்த பண்டிகைக் காலம் மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கும் வரப்பிரசாதமாக அமையப் போகிறது.
7வது ஊதியக்குழு, சமீபத்திய புதுப்பிப்புகள்: இப்போது நாடு முழுவதும் பண்டிகை காலம் தொடங்கிவிட்டது. இல்லத்தரசிகள், அலுவலக பணியாளர்கள், வணிகர்கள், குழந்தைகள், முதியவர்கள் என சாமானியர்கள் முதல் பெரிய தொழிலதிபர்கள் வரை இதற்கான ஆயத்தப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தொலைதூர பணிகளில் இருப்பவர்கள் விடுப்புக்காக விண்ணப்பிக்க தொடங்கிவிட்டார்கள். இத்தகைய சூழ்நிலையில் அனைவருக்கும் பணம் சற்று அதிகமாகவே தேவைப்படுகின்றது. பண்டிகை காலங்களில் புத்தாடைகள், பலகாரங்கள், விருந்தினர் வருகை, பரிசுப்பொருட்கள் என பணத்தேவை அதிகமாகிறது. பணத்தேவை அதிகமாகும் இந்த காலத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு மிக நல்ல செய்தி கிடைத்துள்ளது. இந்த பண்டிகைக் காலம் மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கும் வரப்பிரசாதமாக அமையப் போகிறது.
இந்த நேரத்தில் அரையாண்டுக்கான அகவிலைப்படி உயர்வை அரசாங்கம் அறிவிக்கலாம் என நம்பப்படுகின்றது. அதற்கான ஆயத்தப்பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. சுமார் 1 கோடி குடும்பங்கள் அகவிலைப்படி உயர்வின் பலனைப் பெறுவார்கள் என்று நம்பப்படுகிறது. இது தவிர, நிலுவையில் உள்ள டிஏ பாக்கிகள் குறித்தும் சில நல்ல செய்திகளை அரசு ஊழியர்கள் பெறக்கூடும். இது குறித்து அரசாங்கத்தால் அதிகாரப்பூர்வமாக எதுவும் கூறப்படவில்லை. எனினும், பொருளாதார நிபுணர்கள் தற்போது ஊழியர்களுக்கு இரு பெரிய நல்ல செய்திகள் கிடைக்கும் என கூறுகிறார்கள்.
அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும்?
மத்திய அரசு ஊழியர்களின் (Central Government Employees) அகவிலைப்படி 3 சதவிகிதம் அதிகரித்து மொத்த அகவிலைப்படி 45 சதவிகிதமாக உயரும் என ஒரு சாரார் கூறி வருகிறார்கள். எனினும், ஜனவரி 2023 முதல் ஜூலை 2023 வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு எண்களை வைத்து பார்க்கும்போது அகவிலைப்படி 4 சதவிகிதம் அதிகரித்து மொத்த அகவிலைப்படி 46 சதவிகிதமாக உயரும் என பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள். எனினும், டிஏ ஹைக் (DA Hike) எவ்வளவு இருக்கும் என்பது அரசின் அறிவிப்பு வந்தவுடன் தான் தெரியவரும்.
தற்போதைய அகவிலைப்படி எவ்வளவு?
தற்போது மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் 42 சதவீத அகவிலைப்படியை (Dearness Allowance) பெற்று வருகின்றனர். ஏழாவது ஊதியக்குழ்வின் விதிகளின்படி, ஆண்டுக்கு இருமுறை டிஏ உயர்த்தப்பட்டு, ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஜனவரை 2023-க்கான டிஏ உயர்வு மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. அப்போது 38 சதவிகிதமாக இருந்த அகவிலைப்படி 4% அதிகரிக்கப்பட்டு 42 சதவிகிதமாக உயர்ந்தது. இப்போது டிஏ அதிகரிப்பு (DA) இருந்தால், அதன் விகிதங்கள் ஜூலை 1, 2023 முதல் செயல்படுத்தப்படும்.
7th Pay Commission: அடிப்படை சம்பள கணக்கீடு
மத்திய அரசின் 4 சதவீத டிஏ உயர்வால் அடிப்படை சம்பளம் எவ்வளவு உயரும் என்பதை இந்த கணக்கீடு புரிந்து கொள்ளலாம்.
குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ 18,000 இல் டிஏ அதிகரிப்பு கணிதம்
ஊழியர்களின் அடிப்படை சம்பளம் - மாதம் 18,000 ரூபாய்
புதிய அகவிலைப்படி (46%) - மாதம் ரூ 8280
இதுவரையிலான அகவிலைப்படி (42%) - மாதம் ரூ. 7560
அகவிலைப்படியில் அதிகரிப்பு - 8280-7560 = ரூ. 720
ஆண்டு ஊதிய உயர்வு 720X12 = ரூ.8640
மேலும் படிக்க | வங்கி வாடிக்கையாளர்களே உஷார்!! இந்த ஒரு தவறால் உங்கள் கணக்கு செயலிழந்துவிடலாம்!!
அதிகபட்ச அடிப்படை சம்பளம் ரூ 56,900 இல் டிஏ அதிகரிப்பு கணிதம்
ஊழியர்களின் அடிப்படை சம்பளம் = மாதம் ரூ 56,900
புதிய அகவிலைப்படி (46%) = மாதம் ரூ 26,174
இதுவரையிலான அகவிலைப்படி (42%) = மாதம் ரூ. 23,898
அகவிலைப்படியில் அதிகரிப்பு - 26,174-23,898 = ரூ. 2,276 மாதத்திற்கு
ஆண்டு ஊதிய உயர்வு = 2276X12= ரூ. 27,312
ஒரு கோடிக்கும் அதிகமான ஊழியர்கள் பயனடைவார்கள்
அகவிலைப்படி உயர்வால் ஒரு கோடிக்கும் அதிகமான ஊழியர்கள் பயனடைவார்கள். பனவீக்கம் மற்றும் விலைவாசியால் அவதிப்படும் ஊழியர்களுக்கு அகவிலைப்படி அதிகரிப்பு பெரிய நிவாரணத்தை அளிக்கும்.
டிஏ அரியர் தொகை
கொரோனா காலத்தில் முடக்கப்பட்ட டிஏ அரியர் தொகைக்கான கோரிக்கையை ஊழியர்கள் நீண்ட நாட்களாக விடுத்து வருகிறார்கள். வரும் பொதுத் தேர்தல்களை கருத்தில் கொண்டு அரசாங்கம் ஊழியர்களின் இந்த கோரிக்கைக்கு செவி சாய்க்கலாம் என கருதப்படுகின்றது. எனினும், அரசாங்கத்தின் தரப்பிலிருந்து இன்னும் இது குறித்து எந்த தகவலும் அளிக்கப்படவில்லை.
மேலும் படிக்க | PPF, MF, POSS: ஜாக்பாட் வருமானத்தை அள்ளித்தரும் முதலீட்டு திட்டங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ