7வது ஊதியக்குழு, சமீபத்திய செய்திகள்: 5 மாநிலங்களில் தேர்தல் நடந்து, 4 மாநிலங்களின் முடிவுகள் டிசம்பர் 3ம் தேதி, அதாவது இன்று அறிவிக்கப்பட உள்ளன. வாக்கு எண்ணிக்கைக்கு மத்தியில் மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய அப்டேட் வந்துள்ளது. ஜனவரி 2024க்கான அகவிலைப்படி அதிகரிப்பின் புதிய எண்ணிக்கை வெளிவந்துள்ளது. இதன் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 49 சதவீதத்தை எட்டியுள்ளது. ஏஐசிபிஐ குறியீட்டின் (AICPI Index) சமீபத்திய தரவுகளில், குறியீட்டு எண் 138.4 புள்ளிகளை எட்டியுள்ளது. இதில் 0.9 புள்ளிகள் ஏற்றம் காணப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அக்டோபர் மாதத்திற்கான ஏஐசிபிஐ குறியீட்டு தரவு வெளியிடப்பட்டுள்ளது. 2024 ஜனவரியில் அகவிலைப்படி திருத்தம் செய்யப்பட உள்ளது. ஏஐசிபிஐ குறியீட்டின் அடிப்படையில் அகவிலைப்படி அதிகரிப்பு தீர்மானிக்கப்படும். நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கான புள்ளிவிவரங்கள் இன்னும் வரவில்லை. அவை வந்தவுடன் தான் அகவிலைப்படி அதிகரிப்பு எவ்வளவு இருக்கும் என்பதில் தெளிவு கிடைக்கும். 


அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கலாம்?


மத்திய அரசு ஊழியர்களுக்கான (Central Government Employees) அகவிலைப்படியில் (DA) 5 சதவீதம் என்ற மிகப் பெரிய அதிகரிப்பு இருக்கலாம் என ஏஐசிபிஐ இன்டெக்ஸ் மூலம் நிர்ணயிக்கப்பட்ட டிஏ மதிப்பெண் குறிக்கிறது. தற்போதைய போக்கின் படி, அகவிலைப்படி 51 சதவீதத்தை எட்டும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். அகவிலைப்படி ஏஐசிபிஐ குறியீட்டிலிருந்து கணக்கிடப்படுகிறது. குறியீட்டில் பல்வேறு துறைகளில் இருந்து சேகரிக்கப்பட்ட பணவீக்க தரவு பணவீக்கத்துடன் ஒப்பிடப்பட்டு ஊழியர்களின் கொடுப்பனவு எவ்வளவு அதிகரிக்க வேண்டும் என்பது தீர்மானிக்கப்படுகின்றது.


மேலும் படிக்க | RBI கொடுத்த அதிர்ச்சி: ஒரே அடியில் பல வங்கிகளுக்கு செக்.. உரிமம் ரத்து, சிக்கலில் வாடிக்கையாளர்கள்


4 மாத தரவுகளில் டிஏ 3 சதவீதம் அதிகரித்துள்ளது


தற்போதைய நிலவரப்படி பார்த்தால், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கான ஏஐசிபிஐ குறியீட்டு எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. தற்போது குறியீட்டு எண் 138.4 புள்ளிகளாக உள்ளது. அகவிலைப்படி மதிப்பெண் 49.08 சதவீதத்தை எட்டியுள்ளது. இந்த எண்ணிக்கை நவம்பரில் 50 சதவீதத்தை தாண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்குப் பிறகு டிசம்பர் மாதத்திலும் 0.54 புள்ளிகள் ஏற்றத்துடன் 51 சதவீதத்தை இது நெருங்கக்கூடும். டிசம்பர் 2023 ஏஐசிபிஐ குறியீட்டு எண்கள் வந்த பிறகுதான், அகவிலைப்படியின் மொத்த அதிகரிப்பு எவ்வளவு என்பது தெளிவாகும். 


அகவிலைப்படியில் பெரும் ஏற்றம் இருக்கும்


7வது ஊதியக் குழுவின் (7th Pay Commission) கீழ், ஜூலை முதல் டிசம்பர் 2023 வரையிலான ஏஐசிபிஐ எண்கள் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியைத் தீர்மானிக்கும். அகவிலைப்படி சுமார் 49.08 சதவீதத்தை எட்டியுள்ளது. இன்னும் 2 மாதங்களுக்கான எண்கள் வரவில்லை. தற்போது அகவிலைப்படி (Dearness Allonace) 3 சதவீதம் அதிகரித்துள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர். இந்த போக்கைப் பார்த்தால், இதில் சுமார் 1.60 சதவிகிதம் உயர்வு இன்னும் வரலாம். இது நடந்தால், அகவிலைப்படி 50.60 சதவீதத்தை எட்டும். அத்தகைய சூழ்நிலையில், தசம புள்ளிக்கு மேலே உள்ள எண்ணிக்கை 51 சதவீதமாகக் கருதப்படும். அகவிலைப்படி கால்குலேட்டர் (டிஏ கால்குலேட்டர்) மீதமுள்ள மாதங்களில் அகவிலைப்படி 51 சதவீதத்தை எட்டும் என்பதற்கான அறிகுறிகள் உள்ளன.


மாத வாரியாக ஏஐசிபிஐ எண்கள் மற்றும் அகவிலைப்படி அதிகரிப்பை இங்கே காணலாம்:


Month/ Year CPI(IW) BY2016=100 DA% Monthly Increase
January 2023 132.8
February 2023 132.7
March 2023 133.3
April 2023 134.2
May 2023 134.7
June 2023 136.4
July 2023 139.7
August 2023 139.2
September 2023 137.5
October 2023 138.4
November 2023 49.69
December 2023 50.60

மேலும் படிக்க | ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜனின் கருத்துக்கு பதிலடி கொடுத்த IMF இயக்குநர்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ