சென்னை புத்தக கண்காட்சி: அலைமோதும் கூட்டம்... அப்படி என்ன ஸ்பெஷல்?

48வது சென்னை புத்தகக் கண்காட்சி நந்தனம் YMC  மைதானத்தில் 90 அரங்கங்கள் அமைக்கப்பட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் 10 சதவீதம் தள்ளுபடியுடன் மக்களுக்காகச் சிறப்பாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 

சென்னையில் 48வது புத்தகக் கண்காட்சி தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இருவரும் டிசம்பர் 27 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று புத்தகக் கண்காட்சியைச் சிறப்பாகத் துவங்கி வைத்தனர். இதில் இருக்கும் புத்தகங்களின் பயன்பாடுகளின் சிறப்பு பற்றிப் பார்க்கலாம்.

 

1 /8

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட சுகாதார அமைச்சர் மா. சுப்பிரமணியன், சென்னை மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப்சிங் பேடி ஆகியோர்  தொடக்க விழாவில் பங்கேற்றனர்.

2 /8

தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின்  செயலாளர் எஸ்.கே.முருகன் புத்தகக் கண்காட்சி பற்றிக் கூறினார்.

3 /8

ஆண்டு தோறும் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள், பள்ளி பாடத்திட்டத்துக்கு அப்பாற்பட்ட தலைப்புகளைக் கொண்டு சிறப்பாக மாணவர்களுக்காக அறிமுகம் செய்து வருவது வழக்கம் என்ன கூறினார்.   

4 /8

குழந்தைகளுக்கான கவனம் செலுத்தும் விதமாக இந்த புத்தகக் கண்காட்சியில் இருக்கும் தலைப்புகள், அனைத்தும் பாடத்திட்டத்திற்கு அப்பாற்பட்ட தலைப்புகளைக் கொண்டுள்ளன எனத் தெரிவித்தார்.  

5 /8

48வது சென்னை புத்தகக் கண்காட்சியைப் பார்வையிட 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கு இலவச நுழைவு சீட்டு வழங்கப்பட்டுள்ளன. 5 முதல் 14 வயதுக் குழந்தைகளுக்கான சிறப்பான புத்தகங்கள் மற்றும் சுவாரஸ்ய கதை புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகிறது.  

6 /8

விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும், வார நாட்களில் மதியம் 2.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை இந்த புத்தகக் கண்காட்சி நடைபெறும்.

7 /8

மக்கள் தங்கள் சொந்த ஊர்களில் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடச் செல்வதற்காக முன்னதாகவே இந்த கண்காட்சி தொடங்கப்பட்டது என்று திருமுருகன் கூறினார்.

8 /8

தமிழில் சுமார் 119 தலைப்புகளில், குழந்தைகள் புத்தகங்கள் மற்றும் நாடு முழுவதும் உள்ள இந்திய எழுத்தாளர்களின் மொழியாக்கம் செய்யப்பட்ட புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. டிசம்பர் 27 தொடங்கி ஜனவரி 12 அன்று முடிவடைகிறது.