DA Hike: அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி! மே 31 முதல் சம்பள உயர்வு?
DA Hike: அடுத்த சில நாட்களில் மத்திய அரசு ஊழியர்கள் முக்கியமான செய்தியை பெறலாம். ஊழியர்களின் சம்பளத்தில் பெரும் உயர்வு ஏற்பட வாய்ப்பு.
DA Hike Latest Update: மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் நல்ல செய்தி கிடைக்க போகிறது, மே 31ம் தேதி மாலை மத்திய அரசு டிஏ குறித்த அறிவிப்பை வெளியிடப் போகிறது. இந்த மதிப்பெண் AICPI இன்டெக்ஸ் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த மதிப்பெண் அடிப்படையில், ஜூலை மாதத்தில் மத்திய ஊழியர்களின் அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கப் போகிறது என்பது முடிவு செய்யப்படும். தற்போது அகவிலைப்படி 42 சதவீதமாக உள்ளது, இது ஜனவரி முதல் அமலுக்கு வருகிறது. அதன்பின், அகவிலைப்படி இரண்டரை சதவீதம் அதிகரித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டது
மார்ச் 2023ல், அகவிலைப்படியை உயர்த்துவதாக மத்திய அரசு அறிவித்தது. அப்போது அரசு அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தியது. இந்த உயர்வு ஜனவரி 2023 முதல் அமல்படுத்தப்பட்டது. இப்போது அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு ஜூலை மாதம் வெளியிடப்பட உள்ளது, இது ஏப்ரல் 1 முதல் பொருந்தும் என்று கருதப்படுகிறது. தற்போது, ஏஐசிபிஐ குறியீட்டு எண்களை அரசாங்கம் மே 31 அன்று வெளியிட உள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கப் போகிறது என்பது குறித்து ஊழியர்களுக்கு ஒரு யோசனை கிடைக்கும்.
மேலும் படிக்க | Pension Scheme: ஓய்வூதியத்தில் வர இருக்கும் மிகப்பெரிய மாற்றம்! மத்திய அரசு திட்டம்!
ஏப்ரல்-மே-ஜூன் புள்ளிவிவரங்களும் சேர்க்கப்படும்
அரசாங்கத்தின் தற்போதைய புள்ளிவிவரங்களை பொறுத்து, மொத்த DA மதிப்பெண் 44.46% ஐ எட்டியுள்ளது. இப்போது ஏப்ரல், மே மற்றும் ஜூன் எண்களும் அதில் சேர்க்கப்பட உள்ளன. இம்முறையும் அகவிலைப்படி 4 சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக மத்திய ஊழியர்களின் சம்பளத்திலும் பெரும் ஏற்றம் ஏற்படும். நாட்டில் பணவீக்கம் மிக அதிகமாக உள்ளது என்று சொல்லலாம். கடந்த 2 ஆண்டுகளாக பெட்ரோலியத்தின் விலை லிட்டருக்கு ரூ.100 ஆக உள்ளது. அதே சமயம், உணவுப் பொருட்களின் விலையும், மக்களை சிரமத்துக்குள்ளாக்கியுள்ளது. இந்த பணவீக்கத்துடன் ஒப்பிடுகையில், மக்களின் வருமானம் அந்த அளவுக்கு உயரவில்லை. இதனால் மக்களின் பொருளாதார நிலை சீரழிந்து வருகிறது. இத்தகைய சூழ்நிலையில், அகவிலைப்படி அதிகரிப்பால் மத்திய ஊழியர்கள் சற்று நிம்மதி அடையலாம்.
புதிய ஊதியச் சட்டம் விரைவில் அமலுக்கு வரக்கூடும் என தொழிலாளர் அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும், நான்கு குறியீடுகள் குறித்த வரைவுகளும் மாநிலங்களிடமிருந்து பெறப்பட்டதும் இது குறித்து முடிவு எடுக்கப்படும். இருப்பினும், குறியீடுகள் படிப்படியாக செயல்படுத்தப்படலாம். மத்திய அரசு விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடக்கூடும். குறியீடுகள் அறிவிப்பு தேதியிலிருந்து பொருந்துவதாக கருதப்படும். மாநிலங்கள் தங்கள் சொந்தக் குறியீடுகளை அமல்படுத்த அனுமதி வழங்கப்படும் வகையில் இந்த விஷயத்தில் தளர்வு இருக்கக்கூடும். எனினும், நான்கு குறியீடுகளுக்கும் இறுதிக் காலக்கெடு நிர்ணயிக்கப்பட வேண்டும். இதற்குப் பிறகு, கடைசி தேதிக்குள் அனைத்து குறியீடுகளும் செயல்படுத்தப்பட வேண்டும். இதற்கு, மாநிலங்களுக்கு ஓராண்டு கால அவகாசம் அளிக்கப்படும்.
பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான இபிஎஃப்ஓ வாரிய உறுப்பினரும் பாரதிய மஸ்தூர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான விர்ஜேஷ் உபாத்யாய், ‘ஊழியர்களுக்கான சமூக பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. இதில் பல முக்கிய அம்சங்கள் உள்ளன. ஊழியர்களின் வேலை நேரம், ஆண்டு விடுமுறை, ஓய்வூதியம், பி.எஃப், கையில் கிடைக்கும் சம்பளம், அதாவது டேக் ஹோம் சேலரி, ஓய்வு போன்ற முக்கியமான விஷயங்களில் விதிகள் மாற்றப்பட வேண்டும். 48 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்ய தடை விதிக்கப்படும். ஒவ்வொரு வாரமும் 48 மணிநேரம் மட்டுமே வேலை இருக்கும்.’ என கூறினார்.
மேலும் படிக்க | அரசின் இந்த திட்டங்களில் முதலீடு செய்தால் இவ்வளவு லாபமா? முழு விவரம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ