7th Pay Commission: DA அரியர் தொகை கிடைக்குமா, கிடைக்காதா? குழப்பத்தில் ஊழியர்கள்
ஜூலை 1 முதல் டிஏ முடக்கம் நீக்கப்படுவதால், மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் ஒரு பெரிய உயர்வு இருக்கும். ஏனெனில் அவர்களது அகவிலைப்படி தற்போதைய 17 சதவீதத்திலிருந்து 28 சதவீதமாக அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
7th Pay Commission Latest Updates: மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி (DA) மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலை நிவாரணம் (DR) ஆகியவற்றில் இருக்கும் முடக்கம் 2021 ஜூலை 1 முதல் நீக்கப்படும் என 2021 மார்ச் 1 ஆம் தேதி மத்திய அரசு அறிவித்தது. எனினும், ஜனவரி 1, 2020, 1 ஜூலை 2020 மற்றும் 1 ஜனவரி 2021 ஆகிய மூன்று நிலுவைத் தொகையை தவணை முறையில் செலுத்துவது குறித்து அரசாங்கம் எதுவும் கூறவில்லை.
DA இன் நிலுவையில் உள்ள 3 தவணைகள் குறித்த குழப்பம்
9 மார்ச், 2020 அன்று, நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் மாநிலங்களவையில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், நிலுவையில் உள்ள மூன்று DA தவணைகள் 2021 ஜூலை 1 ஆம் தேதி முதல் புதிய விகிதங்களில் கிடைக்கும் அகவிலைப்படியில் சேர்க்கப்படும் என்று தெரிவித்தார். அகவிலைப்படியின் இந்த மூன்று தவணைகள் மத்திய அரசு ஊழியர்களுக்கு கவலை அளிக்கும் ஒரு விஷயமான இருந்துள்ளன.
ஜூலை 1 முதல் டிஏ முடக்கம் நீக்கப்படுவதால், மத்திய அரசு ஊழியர்களின் (Central Government Employees) சம்பளத்தில் ஒரு பெரிய உயர்வு இருக்கும். ஏனெனில் அவர்களது அகவிலைப்படி தற்போதைய 17 சதவீதத்திலிருந்து 28 சதவீதமாக அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்த தவணைகள் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றால், ஊழியர்களின் 7 ஆவது ஊதியக்குழு அரியர் தொகையில் அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
மே 8 அன்று சந்திப்பு நடக்கவிருந்தது
7 வது ஊதியக்குழுவின் மேட்ரிக்ஸ் சிக்கலைத் தீர்க்க ஜே.சி.எம் தேசிய கவுன்சில், தனிநபர் மற்றும் பயிற்சித் துறை (டிஓபிடி) மற்றும் நிதி அமைச்சகத்தின் செலவுத் துறை அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக மே 8 ஆம் தேதி இந்த அதிகாரிகளுக்கு இடையே ஒரு முக்கியமான சந்திப்பை நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக, இந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. இப்போது இந்த சந்திப்பு இந்த மாதத்தின் கடைசி வாரத்தில் நடக்ககூடும் என தெரிகிறது.
அகவிலைப்படியின் நிலுவையில் உள்ள மூன்று தவணைகளே இந்த சந்திப்பில் முக்கிய விஷயமாக எடுத்துக்கொள்ளப்படும். இந்த சந்திப்பின் நிகழ்ச்சி நிரல் குறித்து கூறிய சிவ் கோபால் மிஸ்ரா, நாங்கள் இது குறித்து அரசாங்கத்துடன் தொடர்ந்து தொடர்பு கொண்டுள்ளோம் என்று கூறினார். நிலுவையில் இருக்கும் அகவிலைப்படி (DA) தவணைகள் பற்றி சந்திப்பில் முக்கியமாக பேசப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். அகவிலைப்படி தவணைகளை ஒன்றாக கொடுக்க முடியாவிட்டாலும் சிறிது சிறிதாக அளிக்கவும் அரசாங்கத்திடம் பரிந்திரைக்கப்போவதாகவும் அவர் கூறினார்.
அகவிலைப்படி 28 சதவீதமாக உயரும்
தற்போது, 52 லட்சம் மத்திய ஊழியர்களும், 65 லட்சம் ஓய்வூதியதாரர்களும் 17 சதவீதம் என்ற விகிதத்தில் DA மற்றும் DR-ஐப் பெறுகிறார்கள். 1 ஜனவரி 2020 இன் 3 சதவிகிதம், 2020 ஜூலை 1 இன் 4 சதவிகிதம் மற்றும் 1 ஜனவரி 2021 இன் 4 சதவிகிதம் ஆகியவை இணைக்கப்பட்டால், DA 2021 ஜூலை 1 முதல் 28 சதவிகிதமாக அதிகரிக்கும். இதன் காரணமாக, மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் (Salary) பெரும் முன்னேற்றம் ஏற்படலாம்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR