7வது ஊதியக்குழு: அகவிலைப்படி அதிகரிப்பு பற்றிய அறிவிப்பு வந்தது முதல் மத்திய அரசு ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த நிலையில், ஊழியர்களுக்கு மீண்டும் ஒரு நல்ல செய்தி கிடைக்கப் போகிறது. இப்போது மற்றொரு உதவித்தொகையை அதிகரிக்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இது நடந்தால், ஊழியர்களின் சம்பளத்தில் பெரும் உயர்வு ஏற்படும். அகவிலைப்படி உயர்வுடன் வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA) உயர்வும் அறிவிக்கப்படக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அகவிலைப்படி அதிகரிப்புடன் எச்ஆர்ஏ-வில் திருத்தமும் எதிர்பார்க்கப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

38% உயர்ந்தது அகவிலைப்படி


மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி 4% உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, இந்த மாதம் முதல் ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்ட சம்பளம் கிடைக்கும். இதனுடன், HRA அதிகரிப்பும் விரைவில் அறிவிக்கப்படலாம். முன்னதாக, கடந்த ஆண்டு ஜூலை மாதம் HRA அதிகரிக்கப்பட்டது. அப்போது அகவிலைப்படியும் 28 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இப்போது அகவிலைபப்டி 38 சதவீதமாகிவிட்டது. ஆகையால் இப்போது எச்ஆர்ஏ-வும் உயர்த்தப்படக்கூடும். 


மேலும் படிக்க | 7th Pay Commission: அகவிலைப்படி உயர்வால் கிடைக்கும் பம்பர் ஊதிய உயர்வு, கணக்கீடு இதோ 


எச்ஆஹ்ஏ எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது


இப்போது அரசு ஊழியர்களுக்கு எச்ஆஹ்ஏ எப்படி தீர்மானிக்கப்படுகிறது என்பதைப் பார்ப்போம். 50 லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட நகரங்கள் 'எக்ஸ் (X)' பிரிவின் கீழ் வருகின்றன. 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்கள், 'ஒய் (Y)' பிரிவில் வருகின்றன. மேலும் 5 லட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட நகரங்கள் 'Z' பிரிவின் கீழ் வருகின்றன. மூன்று வகைகளுக்கும் குறைந்தபட்ச எச்ஆஹ்ஏ ரூ.5400, 3600 மற்றும் ரூ.1800 ஆக இருக்கும்.


எச்ஆஹ்ஏ எவ்வளவு அதிகரிக்கக்கூடும்


பணியாளரின் எச்ஆஹ்ஏ அவர்கள் பணிபுரியும் நகரத்தின் வகையால் தீர்மானிக்கப்படுகிறது. ஊடக அறிக்கைகளின்படி, X வகை நகரங்களில் வசிக்கும் அல்லது பணிபுரியும் அரசு ஊழியர்களின் எச்ஆஹ்ஏ 4-5 சதவிகிதம் அதிகரிக்கும். தற்போது, ​​இந்த நகரங்களில் பணியாற்றும் ஊழியர்கள் அடிப்படை சம்பளத்தில் 27 சதவீதம் ஹெச்ஆர்ஏ பெறுகின்றனர். Y வகை நகரங்களுக்கு 2 சதவீதம் ஹெச்ஆர்ஏ அதிகரிப்பு சாத்தியமாகும். தற்போது, ​​இந்த பணியாளர்களுக்கு 18-20 சதவீதம் ஹெச்ஆர்ஏ கிடைக்கிறது. Z வகை நகரங்களுக்கு 1 சதவீதம் அதிகரிக்கலாம். அவர்களுக்கு தற்போது 9-10 சதவீதம் என்ற விகிதத்தில் Y வழங்கப்படுகிறது.


மேலும் படிக்க | 7th Pay Commission பம்பர் செய்தி: 4% உயர்ந்தது அகவிலைப்படி, மகிழ்ச்சியில் மத்திய அரசு ஊழியர்கள் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ