குஷியில் மத்திய அரசு ஊழியர்கள்: அமைச்சரை கூட்டத்தில் அகவிலைப்படி உயர்வு பற்றிய அறிவிப்பு... லேட்டஸ்ட் அப்டேட் இதோ
7th Pay Commission: இன்னும் ஓரிரு வாரங்களில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளதாகவும், இதில் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படும் என்றும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
7th Pay Commission: நாட்டில் உள்ள லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் அகவிலைப்படி அதிகரிப்புக்காக காத்திருக்கிறார்கள். ஜூலை 2024 -க்கான அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும் என்ற ஆர்வம் அனைவரிடமும் அதிகரித்து வருகின்றது. எனினும், இந்த காத்திருப்பு மிக விரைவில் முடிவுக்கு வரவுள்ளது. இன்னும் சில நாட்களில் மத்திய அரசு இது குறித்த அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது அகவிலைப்படி அதிகரிப்பு குறித்த ஒரு முக்கிய அப்டேட் வந்துள்ளது. அது பற்றி இந்த பதிவில் காணலாம்.
Dearness Allowance: மத்திய அமைச்சரவை கூட்டம்
விரைவில் மத்திய அமைச்சரவை கூட்டம் (Cabinet Meeting) நடைபெற உள்ளதாக கூறப்படுகின்றது. இன்னும் ஓரிரு வாரங்களில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளதாகவும், இதில் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படும் என்றும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இதில், 7வது ஊதியக்குழுவின்படி டிஏ (DA), டிஆர் (DR) அதிகரிப்பது குறித்து முடிவெடுக்கப்படலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அக்டோபர் முதல் வாரத்தில் இந்த கூட்டம் நடந்தால், நவராத்திரி நேரத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த நல்ல செய்தி கிடைக்கும். எப்படியும் தீபாவளிக்கு முன் மத்திய அரசு ஊழியர்கள் (Central Government Employees) இந்த நல்ல செய்தியை பெறுவார்கள் என கூறப்படுகின்றது.
7வது ஊதியக் குழு: ஆண்டுக்கு 2 முறை டிஏ ஹைக்
மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும், ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில், அதாவது ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலைப்படியை அதிகரிக்கின்றது. ஊழியர்களின் இந்த அகவிலைப்படியானது (CPI-IW) அதாவது தொழில்துறை தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டின் அடிப்படையில் கணக்கிடப்படுகின்றது. ஜூன் மாதத்திற்கான ஏஐசிபிஐ குறியீடு (AICPI Index) 141.4 புள்ளிகளுக்கு வந்துள்ளது. இது மே மாதத்தின் 139.9 புள்ளிகளில் இருந்து அதிகரித்துள்ளது. இதன் அடிப்படையில் அகவிலைப்படி மதிப்பெண் 53.36 சதவீதமாக அதிகரித்துள்ளது. தொழிலாளர் அமைச்சகம் மூலம் வெளியிடப்படும் ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் அடிப்படையில் அகவிலைப்படியில் திருத்தம் செய்யப்படுகின்றது. முந்தைய ஆண்டின் ஜூலை முதல் டிசம்பர் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் அடிப்படையில் ஜனவரி மாத அகவிலைப்படியும், ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் அடிப்படையில் ஜூலை மாத அகவிலைப்படியும் நிரணயிக்கப்படுகின்றன.
DA Hike
அந்த வகையில் ஜனவரி 2024 முதல் ஜூன் 2024 வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் அடிப்படையில், ஜூலை 2024 -க்கான டிஏ உயர்வு 3%-4% இருக்கும் என கூறப்படுகின்றது. இதன் பிறகு மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் (Dearness Relief) 53%-54% ஆக அதிகரிக்கும்.
DA Arrears
அகவிலைப்படி அதிகரிப்புக்கான அறிவிப்பு எப்போது வந்தாலும், ஜூலை மாதம் முதலான டிஏ அரியர் தொகை ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு (Pensioners) கிடைக்கும்.
Salary Hike Calculation: ஊதிய உயர்வு கணக்கீடு
சில உதாரணங்களின் மூலம் இதை புரிந்துகொள்ளலாம்.
- ஒரு மத்திய அரசு ஊழியரின் அடிப்படை ஊதியம் ரூ.18,000 என வைத்துக்கொள்ளலாம்.
- ஜூலை மாதம் அகவிலைப்படி 3% அதிகரித்தால், அவரது மொத்த சம்பளத்தில் ரூ 540 அதிகரிக்கும்.
- இந்த அதிகரிப்பு மூலம் ஊழியருக்கு ஆண்டுக்கு ரூ.6,480 கூடுதல் வருமானம் கிடைக்கும்.
- ரூ 56,900 அடிப்படை சம்பளம் பெறும் பணியாளர்களுக்கு 3% டிஏ உயர்வு மூலம் மாத சம்பளம் ரூ.1,707 அதிகரிக்கும்.
- ஆண்டு சம்பளம் ரூ.20,484 உயரும்.
(பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ