Major Changes From October 1, 2024: அக்டோபர் முதல் தேதியிலிருந்து சில பெரிய மாற்றங்கள் நிகழப் போகின்றன. இதில் எல்பிஜி விலை, ஆதார், அகவிலைப்படி ஆகியவை அடங்கும்.
Major Changes From October 1, 2024: அக்டோபர் 1 முதல் நிகழவுள்ள மாற்றங்களில் எல்பிஜி கேஸ் சிலிண்டர் விலை, சிறிசேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்கள், இந்திய ரயில்வே ஸ்பெஷல் டிரைவ், பிபிஎஃப் ஆகியவை அடங்கும். மேலும், மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (Dearness Allowance) தொடர்பான சிறப்பு அறிவிப்புகளும் இந்த மாதம் வரக்கூடும். அக்டோபர் மாதத்தில் ஏற்படவுள்ள மாற்றங்கள் என்ன? மக்கள் மீது இவற்றின் தாக்கம் எப்படி இருக்கும்? முழுமையான விவரங்களை இந்த பதிவில் காணலாம்.
ஒவ்வொரு மாதமும் முதல் தேதியன்று, எண்ணெய் நிறுவனங்கள் எல்பிஜி சிலிண்டரின் விலையில் மாற்றம் செய்கின்றன. சில மாதங்களில் மாற்றங்கள் ஏற்படாமலும் இருக்கின்றன. அக்டோபர் 1 ஆம் தேதியும் எல்பிஜி சிலிண்டர் விலையில் மாற்றங்கள் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. திருத்தப்பட்ட விலைகள் காலை 6 மணிக்கு வெளியிடப்படலாம். சமீப காலமாக 19 கிலோ வணிக ரீதியான எல்பிஜி சிலிண்டர்களின் விலையில் பல மாற்றங்கள் காணப்பட்டாலும், 14 கிலோ வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர்களின் விலை நீண்ட காலமாக மாறாமல் உள்ளது.
ஒவ்வொரு மாதமும் முதல் தேதி, எண்ணெய் நிறுவனங்கள் ஏர் டர்பைன் எரிபொருள் (ஏடிஎஃப்) மற்றும் சிஎன்ஜி-பிஎன்ஜி விலைகளை திருத்துகின்றன. அக்டோபர் மாதத்தின் புதிய திருத்தப்பட்ட விலைகள் செவ்வாய்க் கிழமை காலை தெரியும். செப்டம்பர் மாத தொடக்கத்தில், ATF விலைகள் குறைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
பான் கார்டுக்கு விண்ணப்பிக்கவோ அல்லது வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யவோ இனி ஆதார் பதிவு ஐடியைப் பயன்படுத்த அனுமதிக்கப்படாது. இந்த புதிய விதி அக்டோபர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. பான் எண்ணைத் தவறாகப் பயன்படுத்துவதையும் நகல் எடுப்பதையும் தடுக்க அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
அக்டோபர் 1 முதல், பெண் குழந்தைகளுக்கான திட்டமான சுகன்யா சம்ரித்தி யோஜனா எனப்படும் செல்வமகள் சேமிப்புத் திட்டத்தின் விதிகளும் மாறும். புதிய விதியின்படி, பேத்திகளுக்கான சுகன்யா சம்ரித்தி கணக்கை தாத்தா பாட்டி திறந்திருந்தால், அந்தக் கணக்கு பாதுகாவலர் அல்லது பெற்றோருக்கு மாற்றப்படும். இரண்டு கணக்குகளுக்கு மேல் திறக்கப்பட்டிருந்தால், கூடுதல் கணக்கு மூடப்படும்.
அக்டோபர் 1 முதல் பொது வருங்கால வைப்பு நிதியில் அதாவது பிபிஎஃப் தொடர்பான மாற்றங்கள் வரவுள்ளன. முதலாவது, மைனர் பெயரில் தொடங்கப்படும் பிபிஎஃப் கணக்குகளுக்கு, அவருக்கு 18 வயது நிறைவடையும் வரை தபால் அலுவலக சேமிப்புக் கணக்கு விகிதத்தில் வட்டி வழங்கப்படும். அதன் பிறகு, PPF க்கு பொருந்தும் வட்டி விகிதம் பொருந்தும். இரண்டாவது மாற்றம், ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட பிபிஎஃப் கணக்குகளைத் திறந்திருந்தால், தற்போதுள்ள வட்டி விகிதம் முதன்மைக் கணக்கிற்குப் பொருந்தும் மற்றும் இரண்டாம் நிலை கணக்கு முதன்மைக் கணக்கில் இணைக்கப்படும். மூன்றாவது மாற்றம் என்ஆர்ஐகள் பற்றியது. கணக்கு வைத்திருப்பவரின் குடியிருப்பு நிலையைப் பற்றி படிவம் எச் குறிப்பாகக் கேட்கப்படாத, 1968 இன் கீழ் பிபிஎஃப் கணக்குகள் தொடங்கப்பட்ட செயலில் உள்ள என்ஆர்ஐ கணக்குகளுக்கு செப்டம்பர் 30 வரை தபால் அலுவலக சேமிப்புக் கணக்கு (POSA) வட்டி கிடைக்கும். இந்த தேதிக்குப் பிறகு, வட்டி 0% ஆக இருக்கும்.
அக்டோபர் 1 முதல் எச்டிஎஃப்சி வங்கியின் கிரெடிட் கார்டின் லாயல்டி திட்டத்திலும் மாற்றம் செய்யப்பட உள்ளது. புதிய விதியின்படி, HDFC வங்கி SmartBuy பிளாட்ஃபார்மில் ஆப்பிள் தயாரிப்புகளுக்கான ரிவார்ட் பாயிண்டுகளை ரெடீம் செய்வதை, ஒரு காலண்டர் காலாண்டில் ஒரு பிராடெக்ட் என்ற அளவில் மட்டுப்படுத்தியுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை 2024 -க்கான அகவிலைப்படி உயர்வு அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்ப்டுகின்றது. டிஏ உயர்வுக்கு (DA Hike) பிறகு ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதுயதாரர்களின் அலவிலை நிவாரணம் 53%-54% ஆக அதிகரிக்கும்.
அக்டோபர் 1, 2024 முதல், தேசிய சிறுசேமிப்பு (என்எஸ்எஸ்) திட்டங்களின் (Post Office Small Saving Schemes) கீழ் உள்ள தபால் அலுவலக சிறு சேமிப்புக் கணக்குகளில் பெரிய மாற்றங்கள் ஏற்படும். ஒவ்வொரு காலாண்டிலும் இந்த திட்டங்களின் வட்டி விகிதங்களில் திருத்தங்கள் செய்யப்படுகின்றன. அந்த வகையில் இந்த நிதியாண்டின் மூன்றாம் காலாண்டின் தொடக்கமான அக்டோபர் 1 ஆம் தேதி வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்படும் என நம்பப்படுகின்றது.
அக்டோபர் 1, 2024 முதல், பங்குச்சந்தை வர்த்தகத்தின் ஃப்யூசர்ஸ் மற்றும் ஆப்ஷன்ஸ் பிரிவு (F&O) வர்த்தகத்தின் மீதான செக்யூரிடி ட்ரான்சாக்ஷன் வரி உயரும். 2024 யூனியன் பட்ஜெட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மாற்றங்கள், வளர்ந்து வரும் டெரிவேடிவ்ஸ் சந்தையில் ஊக வர்த்தகத்தை மிதப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. ஆப்ஷன் சேலில் விற்பனை மீதான STT பிரீமியத்தில் 0.0625% முதல் 0.1% வரை அதிகரிக்கும்.
மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) நேரடி வரி விவாத் சே விஸ்வாஸ் திட்டம் 2024 (Direct Tax Vivad Se Vishwas Scheme 2024), அக்டோபர் 1, 2024 முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவித்துள்ளது. ஜூலை 22, 2024 முதல் உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்கள் மற்றும் பிற மேல்முறையீட்டு அதிகாரிகளின் முன் நிலுவையில் உள்ள மேல்முறையீடுகள் மற்றும் மனுக்கள் உட்பட அனைத்து தகராறுகளையும் தீர்க்க, வரி செலுத்துவோரை அனுமதித்து, அதன் மூலம் மூலம் வருமான வரி வழக்குகளைக் குறைக்க இந்தத் திட்டம் உள்ளது.