7வது சம்பள கமிஷன் சமீபத்திய செய்தி: மத்திய அரசு ஊழியர்கள் அகவிலைப்படி அதிகரிப்பிற்காக காத்திருக்கிறார்கள். பொதுவாக நவராத்திரி பண்டிகையை ஒட்டி அரசு அகவிலைப்படியை அறிவிக்கும். பண்டிகைக் காலத்தில் ஊழியர்களுக்கு டிஏ ஹைக் (DA Hike) பரிசு கிடைக்கும். இந்த முறையும் நவராத்திரி துவக்கத்திற்கு முன்னதாக அகவிலைப்படி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இது குறித்து முறையான தகவல்கள் எதுவும் இதுவரை வரவில்லை. ஒரு ஆண்டில் இரு முறை, அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில்  அகவிலைப்படி (Dearness Allowance) அதிகரிகப்படுகின்றது. தற்போது எதிர்பார்க்கப்படும் அகவிலைப்படி உயர்வு ஜூலை 2023 -க்கானது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதற்கிடையில், மத்திய அரசின் பல துறைகளில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி வந்துள்ளது. இந்த ஊழியர்கள் அகவிலைப்படியைத் தவிர, போனஸையும் (Diwali Bonus) பரிசாகப் பெறப்போகிறார்கள். 


பண்டிகை காலங்களில் போனஸ் கிடைக்கும்


இந்திய ரயில்வே ஊழியர்களுக்கு (Railway Employees) ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை ஒட்டி உற்பத்தித்திறன் இணைக்கப்பட்ட போனஸ் (PLB) வழங்கப்படுகிறது. இதில், 78 நாள் சம்பளத்திற்கு இணையான போனஸ் கிடைக்கும். இதில், மிகக் குறைந்த கிரேடு (குரூப் சி மற்றும் குரூப் டி) ஊழியர்களுக்கு இது வழங்கப்படுகிறது. போனஸ் தொகை குறைந்தபட்ச சம்பளத்தின் அடிப்படையில் ஊழியர்களின் கணக்கில் வரவு வைக்கபப்டும். எனினும் இம்முறை அதனை அதிகரிக்குமாறு ரயில்வே கூட்டமைப்பு கோரியுள்ளது. ஆனால், இதில் இறுதி முடிவை மத்திய அரசுதான் எடுக்க வேண்டும்.


Railway Employees Bonus: போனஸ் தொடர்பாக கூட்டமைப்பின் கோரிக்கை என்ன?


இந்திய ரயில்வே ஊழியர் சம்மேளனம் (IREF) 7வது ஊதியக் குழுவின் அடிப்படையில் திருத்தப்பட்ட போனஸ் வழங்கக் கோரி ரயில்வேக்கு கடிதம் எழுதியுள்ளது. 7வது ஊதியக் குழுவின் (7th Pay Commission) பரிந்துரைகள் ரயில்வேயில் 2016 ஜனவரி 1ஆம் தேதி அமல்படுத்தப்பட்டாலும், 6வது ஊதியக் குழுவின் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியத்தின் அடிப்படையில்தான் ஊழியர்களின் போனஸ் (PLB) இன்னும் வழங்கப்படுகிறது என்று IREF கோரியுள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், 7வது ஊதியக் குழுவின் கீழ் அதை மாற்றி வழங்க வேண்டும் என கோரிக்கை உள்ளது.


மேலும் படிக்க | பணத்தை பன்மடங்காக்கும் ‘சில’ சிறந்த முதலீட்டு திட்டங்கள்!


எந்த ஊழியர்கள் போனஸை எதிர்பார்க்கலாம்? 


ஒவ்வொரு ஆண்டும் பண்டிகைக் காலத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த போனஸ் வழங்கப்படுகிறது. ரயில்வே அமைச்சகம் அனைத்து நான் கெஸட் ஊழியர்களுக்கும் (குரூப் சி மற்றும் குரூப் டி) உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்கும் முயற்சியை உறுதி செய்வதற்கும் ஊக்கத்தொகையாக PLB செலுத்துகிறது. இதில், பணியாளரின் 78 நாள் சம்பளத்திற்கு இணையான போனஸ் தொகை வழங்கப்படுகிறது. லோயர் கிரேட் (குரூப் D) ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியத்தின் அடிப்படையில் போனஸ் கணக்கிடப்படுகிறது.


போன்ஸ் தொகையாக எவ்வளவு கிடைக்கும்?


ஆறாவது ஊதியக் குழுவில், குரூப் டி ஊழியர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் ரூ.7000 மட்டுமே ஆகும். அதே சமயம் 7வது ஊதியக்குழு அமலுக்கு வந்த பிறகு இது ரூ.18,000 ஆக உயர்த்தப்பட்டது. அனைத்து குரூப் சி மற்றும் குரூப் டி ஊழியர்களுக்கும் (Central Government Employees) போனஸாக ரூ.17,951 மட்டுமே கிடைப்பதாக ரயில்வே ஊழியர் சம்மேளனத்தின் கூறுகின்றது. அதன் கணக்கீடும் ஆறாவது ஊதியக் குழுவின் குறைந்தபட்ச சம்பளமான ரூ.7000 அடிப்படையிலானது. 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின்படி, குறைந்தபட்ச ஊதியத்தை அடிப்படையாகக் கொண்டு போனஸ் தொகையை ரூ.46,159 ஆக உயர்த்த வேண்டும் என்று ரயில்வே ஊழியர் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இதற்காக ரயில்வே அமைச்சகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


தற்போதைய சூழ்நிலையில் அரசு கருவூலத்திற்கு எவ்வளவு சுமை ஏற்படும்?


ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் வேலைக்குச் சமமான தொகையை போனஸாகச் (Bonus) செலுத்துவதால், அரசின் கருவூலத்தில் ரூ.1832 கோடிக்கும் அதிகமான சுமை ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆறாவது ஊதியக் குழுவால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியமான ரூ. 7,000 இல் PLB கணக்கிடப்படும் போது இந்த நிதிச் சுமை ஏற்படுகிறது.


மேலும் படிக்க | வீட்டுக் கடனில் இருந்து விரவில் விடுபட... சில எளிய டிப்ஸ்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ