வீடு என்பது அனைவருக்கும் தேவை. அதோடு அது பலரது கனவாகவும் உள்ளது. ஆனால் அதை நிறைவேற்றுவது எளிதல்ல. ஏனென்றால் சொத்து விலைகள் மிக அதிகமாக இருப்பதால் அதை எல்லோரும் வாங்க முடியாத நிலை தான் உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், அவர்களின் கனவை நனவாக்க வீட்டுக் கடன் மிக உதவியாக இருக்கும். வீட்டுக் கடன் என்பது நீண்ட காலக் கடன். கடன் வாங்கியவர், வீட்டுக் கடனை வட்டியுடன் திருப்பிச் செலுத்த வேண்டும். கடன் வாங்கியவர் எவ்வளவு அதிக காலத்திற்கான கடனை வாங்குகிறாரோ, அவ்வளவு அதிகமாக வட்டி செலுத்த வேண்டும். எனவே, வட்டியை விரைவில் செலுத்த வேண்டும். நீங்கள் வீட்டுக் கடனை சீக்கிரம் அடைத்து விட்டு ஒவ்வொரு மாதமும் EMI செலுத்தும் தொந்தரவிலிருந்து விடுபட விரும்பினால், உங்களுக்கு உதவியாக இருக்கும் சில வழிமுறைகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
எனவே, நீங்கள் அதை விரைவில் செலுத்த வேண்டும். உங்கள் வீட்டுக் கடனை முன்கூட்டியே அடைக்க விரும்பினால், அதை புத்திசாலித்தனமாக நிர்வகிக்க சில குறிப்புகள்.
1. ஒரு நேரத்தில் ஒரு கடன்
ஒரு நேரத்தில் ஒரு கடனைப் பெற்று, அதைத் திருப்பிச் செலுத்துவதில் உங்கள் கவனம் முழுவதையும் திட்டமிட்டு செலுத்துங்கள். பணம் செலுத்துவதில் தவறினால் அபராதம் விதிக்கப்படும். உங்கள் நிதி நிலைமையை மோசமாக்கும். எல்லா இடத்திலும் கடன் வாங்கும் போது, அதனை அடைப்பது என்பது மிகவும் கடினமான விஷயம்
2. வீட்டுக் கடனை முன்கூட்டியே திரும்ப செலுத்துங்கள் (Home loan pre- payment)
அவ்வப்போது வீட்டுக் கடனை முன்கூட்டியே செலுத்துவது உங்கள் வீட்டுக் கடனை முன்கூட்டியே செலுத்துவதற்கான ஒரு சிறந்த வழியாகும், ஏனெனில் இது உங்கள் திருப்பிச் செலுத்தும் காலத்தை குறைக்கிறது. இது வாடிக்கையாளரின் மொத்த வட்டித் தொகையையும் சேமிக்கிறது. ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின்படி, வீட்டுக் கடனுக்கு முன்பணம் செலுத்துவதற்கு அபராதம் விதிக்க முடியாது. எனவே, கடன் வாங்குபவர்கள் தங்களிடம் கூடுதல் பணம் இருக்கும்போதெல்லாம் தங்கள் வீட்டுக் கடனைச் ஓரளவிற்கு அடைக்க முயற்சிக்க வேண்டும்.
மேலும் படிக்க | உங்கள் வங்கி கணக்கில் இருந்த 295 ரூபாய் காணவில்லையா... இது உங்களுக்கான எச்சரிக்கை!
3. வீட்டுக் கடன் EMI தொகையை அதிகரிக்கவும்
நீங்கள் வேலையில் இருந்தால் அல்லது உங்கள் வருமானம் காலப்போக்கில் அதிகரிக்கும் தொழிலில் இருந்தால், உங்கள் வீட்டுக் கடன் EMI தொகையை படிப்படியாக அதிகரிக்க முயற்சிக்கவும். நீங்கள் அதிக EMI மூலம் வீட்டுக் கடனை முன்கூட்டியே செலுத்தினால், அது உங்கள் நிலுவைத் தொகையை வெகுவாகக் குறைக்கும்.
4. பிளோடிங் வட்டி விகிதத்திலிருந்து நிலையான வட்டி விகிதம்
வீட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான மிகச் சிறந்த வழி, பிளோட்டிங் வட்டி விகிதத்திலிருந்து (floating interest rate) நிலையான வட்டி விகிதத்திற்கு (fixed interest rate) மாறுவதாகும். பிளோட்டிங் வட்டி விகிதக் கடனில், இந்திய ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகிதம் அதிகரித்தாலோ அல்லது வேறு ஏதேனும் ஒரு காரணங்களுக்காகவோ கடன் வழங்குபவர் வட்டி விகிதத்தை அதிகரிக்கலாம். இதனால், நிலையான வட்டி விகிதத்திற்கு மாறுவது உங்களுக்கு நிதி லாபத்தை கொடுக்கும்.
5. வருடத்திற்கு ஒரு முறை கடனை ஓரளவிற்கு திரும்ப செலுத்துதல்
குறைந்த பட்சம் வருடத்திற்கு ஒரு முறையாவது வீட்டுக் கடனை ஓரளவிற்கு திரும்ப ( Partial payment) செலுத்துங்கள். கடன் தொகையில் 20-25 சதவீதத்தை செலுத்துவது வீட்டுக் கடனின் அசல் தொகையையும் வட்டி அளவையும் குறைக்கும், பின்னர் EMI தொகை அல்லது கடன் திருப்பிச் செலுத்தும் காலமும் குறைக்கப்படும்.
மேலும் படிக்க | பென்ஷன் இல்லை என்ற கவலை வேண்டாம்... LIC வழங்கும் அச்சதலான ஜீவன் சாந்தி திட்டம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ