DA Hike, DA Arrears in 7th CPC Update News in Tamil: மத்திய அரசு ஊழியர்களுக்கு சமீப காலங்களில் பல நல்ல செய்திகள் கிடைத்துள்ளன. அவர்களது அகவிலைப்படி சமீபத்தில் 4% அதிகரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்தூ ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் ஆகியவை 50 சதவிகிதமாக அதிகரித்துள்ளன. இதைத் தொடர்ந்து ஊதியத்தின் பிற கூறுகளிலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது ஊழியர்களுக்கு மற்றொரு நல்ல செய்தி கிடைக்கும் என எதிர்பார்க்கபடுகின்றது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய அரசு நிலுவையில் உள்ள 18 மாத அகவிலைப்படி (Dearness Allowance) அரியர் தொகையை ஊழியர்களுக்கு அளிக்கவுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தொகை விரைவில் ஊழியர்களின் கணக்கில் டெபாசிட் செய்யப்படும் என கூறப்படுகின்றது. இது பற்றி இந்த பதிவில் காணலாம். 


அகவிலைப்படி அரியர் தொகை


அரசாங்கம் டிஏ அரியர் (DA Arrears) தொகையை மத்திய அரசு ஊழியர்களின் (Central Government Employees) கணக்கில் டெபாசிட் செய்தால் அதன் மூலம் 1 கோடிக்கும் அதிகமான குடும்பங்கள் பயனடையும் என நம்பப்படுகிறது. கொரோனா காலத்தில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக உலகம் முழுவதும் நிதி நெருக்கடி ஏற்பட்டது. இந்தியாவிலும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் அவதியில் இருந்தனர். இதை சமாளிக்க, மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைபப்டியை அரசு முடக்கியது. அந்த தொகையை அதிக தேவையில் இருந்தவர்களுக்கு பயன்படுத்தியது. நிலைமை சற்று சீரானவுடன் அகவிலைப்படி முடக்கம் நீக்கப்பட்டது. ஆனால், ஜனவரி 1, 2020 முதல் ஜூன் 30, 2021 வரை, முடக்கப்பட்ட காலத்திற்கான அகவிலைப்படி நிலுவைத் தொகை இன்னும் ஊழியர்களுக்கு கிடைக்கவில்லை. 


மேலும் படிக்க | ஏப்ரல் மாதம் 14 நாட்கள் வங்கிகள் விடுமுறை.. தேதி வாரியாக விவரம் இதோ!


இதற்கு அரசு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. மக்களவைத் தேர்தல் முடிந்து புதிய அரசு அமைந்தவுடன் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


ஃபிட்மென்ட் பேக்டர் அதிகரிப்பு


ஃபிட்மென்ட் பேக்டரை (Fitment Factor) அதிகரிக்க வேண்டும் என்று ஊழியர்கள் நீண்ட நாட்களாக கோரி வருகின்றனர். இதற்கும் ஒப்புதல் அளிக்கப்படலாம்.  தற்போது மத்திய அரசு ஊழியர்களின் ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.57 ஆக உள்ளது. இதன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுகின்றது. இதை 3.00 மடங்காக அத்கரிக்க வேண்டும் என ஊழியர் சங்கங்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். அரசாங்கம் ஃபிட்மெண்ட் ஃபாக்டரை 3.00 -க்கு பதிலாக 3.68 ஆகவும் உயர்த்த வாய்ப்புள்ளதாக சில பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். அப்படி நடந்தால், அடிப்படை சம்பளம் ரூ.18,000 -இல் இருந்து ரூ.21,000 ஆக உயரும். இது ஊழியர்களின் ஊதியத்தில் மிகப்பெரிய ஏற்றத்தை கொண்டு வரும். 


அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக இதை இன்னும் அறிவிக்கவில்லை. எனினும் இது நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ளதால், இதுவும் விரைவில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. 


இதற்கிடையில் அகவிலைப்படி 50% -ஐ எட்டியுள்ளதால், பின்வரும் அலவன்சுகளிலும் அதிகரிப்பு ஏற்படும்:


- வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA), 
- குழந்தைகளின் கல்வி உதவித்தொகை
- குழந்தை பராமரிப்புக்கான சிறப்பு கொடுப்பனவு
- விடுதி மானியம்
- இடம் மாற்றத்துக்கான TA 
- பணிக்கொடை வரம்பு
- யூனிஃபார்ம் கொடுப்பனவு
- சொந்த வாகனத்திற்கு மைலேஜ் கொடுப்பனவு
- தினசரி கொடுப்பனவு
- பயணக் கொடுப்பனவு
- கேன்டீன் அலவன்ஸ்
- டெபுடேஷன் அலவன்ஸ்


மேலும் படிக்க | உங்கள் PF கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது? தெரிந்து கொள்ள எளிய வழிகள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ