மத்திய அரசு அதன் ஊழியர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியான செய்தியினை வழங்கவுள்ளது, அரசு எடுக்கப்போகும் சில முடிவுகளின் மூலம் ஊழியர்களின் சம்பளம் 49000 லிருந்து 96000 ஆக உயரும் என்றும் இதன்மூலம் கிட்டத்தட்ட 52 லட்சம் ஊழியர்கள் பயனடைய போகிறார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஃபிட்மென்ட் காரணி 2.57 சதவீதத்தில் இருந்து 3.68 சதவீதமாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது, இது செப்டம்பர் 1, 2022 முதல் அமல்படுத்தப்படலாம் என்று கருதப்படுகிறது.  ஃபிட்மென்ட் காரணி உயரும் பட்சத்தில் ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் ரூ.8000 ஆக உயரும்போது சம்பளம் ரூ.18000லிருந்து ரூ.26000 ஆக உயரும்.  மேலும் இது அமல்படுத்தப்படும்போது லெவல் மேட்ரிக்ஸ் 1-ல் இருந்து மத்திய ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.26,000 என்பதிலிருந்து ஆரம்பமாகும்.  ஆனால் இதுவரை அரசு இதுகுறித்த எவ்வித அறிவிப்பையும் வெளியிடவில்லை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஃபிட்மென்ட் காரணி மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது, இதன்மூலம் ஊழியர்களின் சம்பளம் இரண்டரை மடங்குக்கு மேல் உயர்கிறது.  தற்போது​​ஊழியர்களின் ஃபிட்மென்ட் காரணி 2.57 மடங்கு, இதன் அடிப்படையில் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ.18000 மற்றும் அதிகபட்ச அடிப்படை சம்பளம் ரூ.56900.  கடந்த 2017ல் என்ட்ரி லெவல் அடிப்படை ஊதியம் ரூ.7000ல் இருந்து ரூ.18000 ஆக உயர்த்தப்பட்டது.  தற்போது அரசு ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் பட்சத்தில் அவர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ.8000 ஆக உயர்த்தப்படுவதோடு, பே-லெவல்-1 ல் ரூ.18000 என்ற கணக்கில் இருக்கும் அடிப்படை சம்பளம் ரூ.26000 ஆக உயரும்.



மேலும் படிக்க | இந்த அஞ்சலக திட்டத்தின் மூலம் பணத்தை இரட்டிப்பாக்கலாம்! முழு விவரம்!


ஃபிட்மென்ட் ஃபேக்டர் சம்பளக் கணக்கீடு:


- 6வது ஊதியக் குழுவின் கீழ் குறைந்தபட்ச ஊதியம் ரூ.7,000, ஃபிட்மென்ட் காரணி 1.86 மடங்கு மற்றும் 54% இன்க்ரிமெண்ட் .
- 7வது ஊதியக் குழுவின் கீழ், குறைந்தபட்ச ஊதியம் ரூ.18,000, ஃபிட்மென்ட் காரணி 2.57 மடங்கு மற்றும் 14.29% இன்க்ரிமெண்ட்.
- 8வது ஊதியக் குழுவின் கீழ் ஃபிட்மென்ட் காரணி 3.68 மடங்கு இருந்தால், குறைந்தபட்ச ஊதிய அளவு ரூ.26,000 ஆக இருக்கும்.
- உதாரணமாக, ஒரு மத்திய ஊழியரின் அடிப்படை சம்பளம் ரூ.18,000 எனில், அலவன்ஸ்கள் தவிர்த்து அவருடைய சம்பளம் ரூ.18,000 X 2.57 = லாபம் ரூ.46,260 ஆக இருக்கும்.
- 3.68 ஆக இருந்தால், சம்பளம் ரூ 95,680 (26000 X 3.68 = 95,680) அதாவது ரூ 49,420 சம்பளத்தில் பலனடையும்.


ஆகஸ்ட் மாதத்தில் மத்திய அரசின் கீழ் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் மாதந்தோறும் ஓய்வூதியம் பெரும் ஓய்வூதியதரர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்த்தப்பட்டது.  அதேசமயம் பலரும் எதிர்பார்க்கும் 8-வது ஊதியக்குழு ஜனவரி 1, 2026 முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.  8-வது ஊதியக்குழு அமல்படுத்தப்பட்டால் லெவல்-1 பே மேட்ரிக்ஸில் இருந்து மத்திய ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.26,000 ஆக இருக்கும், இருப்பினும்  8-வது ஊதியக்குழுவை அமல்படுத்துவது குறித்து அரசு பரிசீலிக்கவில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | 7th Pay Commission: அகவிலைப்படியில் 4% அதிகரிப்பு, ஊதியத்தின் முழு கணக்கீடு இதோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ